விபத்தில் உயிருக்கு போராடும் தன் கணவரின் உயிரை காக்க பணம் இல்லாமல் தவிக்கும் ஆனந்திக்கு நடிகர் ஒருவரின் குழந்தைக்கு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தந்தால் கணவரின் மருத்துவ செலவை ஏற்பதாக நடிகர் தரப்பில் கூறப்படுகிறது. அதற்கு சம்மதிக்கும் ஆனந்தி திடீரென்று காணாமல் போகிறார். அவரை தேடும் பணி ஒரு பக்கம் நடக்க இதற்கிடையில் பலவேறு சம்பவங்கள் நிகழ்கிறது. பல மர்ம மரணங்களும் நடக்கிறது. ஆனந்தி கிடைத்தாரா? கொலைகள் நடப்பது ஏன்? கொலையாளி யார் என்ற கேள்விகளுக்கு கிளை மாக்ஸ் பதில் அளிக்கிறது.பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து யுகி தொடங்குகிறது. படத்தில் சில நிமிடங்களில் நான்கு முக்கியமான கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகமாகின்றன – ஒரு துப்பறியும் நபர் (நரேன்), ஒரு உதவியாளர் (நாட்டி), ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி (புருஷோத்தமன்) மற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் (கதிர்). இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரு பொதுவான நோக்கத்தால் இணைக்கப்பட்டுள்ளன – காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பது – கார்த்திகா (ஆனந்தி). துப்பறியும் நந்தகுமார் (நரேன்) எஸ்ஐ ராஜ்குமார் (கதிர்) மற்றும் ஷாலினி (ஆத்மியா) ஆகியோருடன் சேர்ந்து காணாமல் போன வழக்கின் மர்மத்தை நெருங்கும்போது, ஒரு பெண் டாக்டரின் தற்கொலை மற்றும் மருத்துவமனை செவிலியர் வெளிப்படுத்திய தகவல்கள் கார்த்திகாவின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான அத்தியாயங்களை அவிழ்த்து விடுகின்றன.துப்பறிவாளர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பதோடு எப்போதும் இறுக்கமான முகத்தோடு இருப்பதால், அவர் பின்னணியில் ஏதோ ட்விஸ்ட் இருப்பதை உணர முட்கிறது. ஆனால், அங்கும் நாம் நினைத்தது நடக்காமல் வேறு ஒன்று நடப்பது எதிர்பாராத ட்விஸ்ட்டாக அமைகிறது.போலீஸ் எஸ்.ஐ-யாக நடித்திருக்கும் கதிரின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சாதாரணமானதாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் படத்தின் மையக்கருவாக மாறி அவர் காட்டும் அதிரடியும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் அமர்க்களம்.நட்டி, கதிர், நரேன், ஆனந்தி, பவித்ரா என எல்லா பாத்திரங் களுமே ஒரு வகையில் சஸ்பென் ஸாகவே கடைசி வரை நகர்வதும் இறுதியில் ஒவ்வொரு வரும் யார் யாரென்று தெரிய வரும்போது ஆச்சரியம் மேலிடுவதையும் தவிர்க்க முடியவில்லை.ஆனந்தியை தேடி ஆதாரம் கிடைக்காத நிலையிலும் சளைக் காமல் நரேன் தேடுவதும், பவித்ரா லட்சுமியை தனது மனைவி என்று கூறி அவருக்கு கதிர் பணிவிடை செய்வதும், சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு நட்டி தேடுதல் வேட்டை நடத்துவதும் இடியாப்ப சிக்கலில் கொண்டு காட்சிகளை நிறுத்துகிறது. அவற்றை ஒவ்வொரு முடிச்சாக இரண்டாம் பாதியில் அவிழ்ப்பது சுவாரஸ்யம். கொஞ்சம் கவனம் சிதறினாலும் கதை புரியாமல் போய்விடும்.ஒட்டுமொத்தமாக, யுகி பிட்கள் மற்றும் துண்டுகளில் சுவாரஸ்யமானது.
