நம்மூர்க்காரராக இருந்தாலும் வெளிநாட்டில் சென்று செட்டிலான கணேஷ் சந்திரசேகர் இப்படத்தை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருப்பதுடன் அம்புலிமாமா கதையில் வருவதுபோல் கதைப் பிரியர்களை கவரும் வகையில் காட்சிகள் அமைத்திருக்கிறார்.செஞ்சி கோட்டையில் புதையல் ஆராய்ச்சியை தொடங்கும் கணேஷ் சந்திரசேகர் அங்கு கிடைக்கும் ஆதாரத்தை கொண்டு அடுத்தடுத்து மதுரை, ராஜபா ளையம், தென்காசி, கல்லார் ஆகிய இடங்களுக்கு சென்று புதையல் குகைக்கான ரகசிய சாவியை தேடி கண்டு பிடிப்பது சுவாரஸ்யம்.ஒரு புதையல் வேட்டை போல் இந்தக் கதை தொடங்குகிறது.படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது .ஏதோ ஒரு ரகசியம், மனித அறிவுக்குக் கட்டுப்படாத ஒன்று இருப்பதாக நம்மை அழைத்துச் செல்கிறது.திரைப்படத்தில் வரும் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன் மாஸ்டர் தர்சன் குமார் மாஸ்டர் விதேஷ் ஆனந்த் மாஸ்டர் சஞ்சய் பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.அந்தக் காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் அந்தப் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு உள்ளது கேமரா. ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டுக்கள்.காட்சிகள் செஞ்சி தொடங்கி பல்வேறு நிலப்பகுதிகளிலும் படமாகி உள்ளது .அந்தக் காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் அந்தப் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு உள்ளது கேமரா. ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டு கூறலாம். நம் தென்னிந்தியப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத பல இடங்களில் நுழைந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.அதனால்தான் படத்தில் அந்த லொகேஷன் ஒரு கதாபாத்திரம் போலவே அமைந்து பார்ப்பவர்கள் மனதில் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறது. அப்படிப்பட்ட லொகேஷன்களைச் தேர்வு செய்து சரியாகப் பயன்படுத்திய இயக்குநரையும் பாராட்டலாம்.நமது பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சியாக உருவாக்கிய விதத்தில் செஞ்சி படம் வெற்றி பெற்றுள்ளது.குறைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த நிலக்காட்சிகளுக்காகவே படத்தை ரசிக்கலாம்.
Gingee
0
167
Next article