-0.2 C
New York
Monday, December 2, 2024

Buy now

spot_img

Samantha next is 70 yeras old Grandma in Korean remake.

70 வயது பாட்டியாக சமந்தா
திருமணத்திற்கு பிறகு சமந்தா இன்னும் பிஸியாகியிருக்கிறார். மெர்சல், இரும்புத்திரை ஆகிய படங்களின் வெற்றி கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தெலுங்கில் சமந்தா கிராமத்து பெண்ணாக நடித்த ‘ரங்கஸ்தலம்’ படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது. தற்போது, தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘யூடர்ன்’ படத்தில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படமாக ‘யூடர்ன்’ தயாராகிவருகிறது. 
தவிர, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’, விஜய்சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களிலும் சமந்தா நடிக்கிறார். தற்போது தென்கொரியாவில் பெரிய வெற்றி பெற்ற ‘மிஸ் கிரேனி’ என்ற படத்தின் ரீமேக்கில் 70 வயது மூதாட்டியாக நடிக்க சம்மதித்து இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இந்நிலையில் சமந்தா திடீரென்று திருப்பதி கோவிலுக்கு சென்றார்.முக்கிய பிரமுகர்களுக்கான வழியில் சென்று சாமி கும்பிட்டார். சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. பின்னர் சமந்தா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எனக்கு மிகவும் பிடித்தமான இடம் திருப்பதி. இங்கு பல தடவை வந்து இருக்கிறேன். திருப்பதிக்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கிறது’’ என்றார்.
 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE