மிகவிரைவில் வெளியாகவிருக்கும் விருவிருப்பான படம் “தடம்“
அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்ததயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது “தடம்” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், “தடம்” படத்தில் தான்யாஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யாபிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள்.
இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றுதயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Director : Magizh Thirumeni