22.1 C
New York
Monday, May 20, 2024

Buy now

Sanjeevan

நிலன் (வினோத்) ஒர்க் ஃபிரம் ஹோம் செய்கி றான். அவனுக்கு ஸ்னூக்கர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம். அதற்கான போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்கிறான். நிலனை அவனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் காதலிக் கிறாள். போட்டியிலும் காதலிலும் ஜெயித்த மகிழ்ச்சியில் நண்பர்கள் ஏற்காடு சுற்றுலா செல்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்குகிறது. இதன் முடிவு என்ன என்பதை எதிர்பாராத ஷாக்காக சொல்கிறது கிளை மாக்ஸ்.இயக்குனர் மணி சேகர் ஸ்னூக்கர் கிளப் வைத்திருந்தவராம். அதனாலேயே இதுவரை எவரும் சொல்லாத ஸ்னூக்கர் கதைக்களத்தை தேர்வு செய்து இயக்கியுள்ளார். முதல்பாதி முழுவதும் ஸ்னூக்கர், நண்பர்கள் கலாட்டா என விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் செல்கிறது. அதுவும் சத்யா, ஷிவ் நிஷாந்த், யாசீன் மூவரும் காமெடியில் கலக்கியுள்ளனர். புதுமுகமாகவே தெரியவில்லை. விமல் ராஜா பணக்கார நண்பனாக நடித்துள்ளார். அதற்கே உரிய சில மனோபாவத்துடன் நடித்துள்ளது இயல்பாக உள்ளது. முதல் பாதியில் நண்பர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள், ஸ்னூக்கர் விளையாட்டு, காதல் என சொல்லியவர் இரண்டாம் பாதியில் அப்படியே வேறு ஒரு கதையை சொன்ன மாதிரி தோன்றியது. இருந்தாலும் கிளைமாக்ஸ் நம்மை அழ வைக்கிறது. மொத்தத்தில் புதியவர்களின் புதிய முயற்சி வென்றுள்ளது.வினோத்துக்கும், திவ்யாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது. இருவருமே இளையராஜாவின் இசை பொதிந்த ஒரே ரிங்டோனை வைத்திருக்க வினோத் போன் ஒலிக்கும் போது, “இது என்னுடைய ரிங்டோன்…” என்று திவ்யா சொல்ல “இல்லை… இது இளையராஜாவின் ரிங்டோன்..!” என்று வினோத் சொல்வது ஒரு காதல் ஹைக்கூ.ஹீரோயின் ஐ டி கம்பெனியில் வேலை செய்தாலும் ஒரு பெண் ணுக்கே உரிய வெட்கம், காதல், திருமண நம்பிக்கை என்று ஐடியில் பணிபுரியும் பெண்களும் தடம் மாறாமல் வாழ்கிறார்கள் என்பதை அருமையாக நடிப்பில் வெளிப்படுத்தி மனதில் இடம் பிடிக்கிறார்.சக நண்பர்கள் எல்லோரும் வேடத்தின் தன்னையை ஒரிஜன லாக வெளிப்படுத்தி ஜமாய்க்கின் றனர்.
போதை மருந்து கடத்தும் காட்சியில் இரண்டு நண்பர்கள் கைதானதும் கதை க்ரைம் சப்ஜெக்டாகிவிடுமோ என்று எண்ணும்போது அதை காமெடியாக்கி அரங்கை கலகலப்பில் ஆழ்த்தி விடுகின்றனர்.மலர் மூவி மேக்கர்ஸ் தயாரித் திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மணி சேகர். இவர் நிஜத்தில் ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் என்பதால் அதை எப்படி கையாள வேண்டுமோ அப்படி அழகாக கையாண்டிருக்கிறார்.படம் முழுவதும் நிரம்பி இருக்கும் நகைச்சுவை தொய்வில்லாமல் படத்தைக் கொண்டு செல்கிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE