டி மான்டி காலனிக்கு பிறகு அருள்நிதி நடிக்கும் படங்களின் பாணி முற்றிலும் வித்தியாமான கதைகளாகவே வருகிறது. அந்த வரிசையில் “டைரி” படமும் வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் உருவாகியிருக் கிறது.ஊட்டியின் 13வது கொண்டை ஊசி வளைவு நெருங்கும்போது விபத்து நேரிட்டு பலர் பலியாவது அவிழாத மர்மமாக இருப்பதுதான் கதையை ஜெட் வேகத்தில் நகர்த்துகிறது.ஊட்டி செல்லும் கடைசி பஸ் வந்து நின்றதும் அது மர்ம பஸ்ஸாக இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.பஸ்சில் இருக்கும் எம் எல் ஏ மகள் தன் பையில் 200 சவரன் நகை இருப்பதாகச் சொன்னதும் அதை கேட்ட கொள்ளையர்கள் கொள்ளையடிக்க திட்டமிடுவது காட்சியை த்ரில்லாக்குகிறது.கொலையாளிகளையும் தன் காரை திருடியனையும் பிடிக்க பஸ்ஸை வழி மட.க்கி அருள்நிதி ஏறியதும் ஆக்ஷன் காட்சிகள் அதகளப்படுகிறது.ஊட்டி மலைப்பாதையில் நடக்கும் ஒரு பேருந்துப் பயணமே படத்தின் மையம். அப்பேருந்தில் வரும் சதீஷ்கண்ணன், ஜெயலட்சுமி தம்பதியர் அவர்களின் குழந்தைகளாக வரும் சிறுவன் ஜெய்ஸ்வந்த் சிறுமி பிரஜுனா சாரா, இளம்பெண் ஹரிணி, நக்கலைட்ஸ் தனம்,ரஞ்சனா நாச்சியார், கொலைகாரர்களாக வரும் சுரேந்தர் தாகூர், சூரஜ்பாப்ஸ், அகோன்,தணிகை,பவித்ரன், அப்பேருந்தின் ஓட்டுந்ராக வரும் புகழேந்தி நடத்துநராக வரும் மாதேஸ்வரன் காதல் இணையராக வரும் ருத்ரா, சோனியாசுரேஷ் ஆகிய அனைவரும் தத்தம் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்/
நாயகி, பவித்ரா மாரிமுத்து, ஷ்ரத்தா ஸ்ரீ நாத் சாயல் இருந்தாலும், ஆக்ஷன் காட்சியிலும் காதல் காட்சிகளிலும் தனக்கென ஒரு தனிச்சாயலை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.சாம்ஸ், தணிகை உள்ளிட்ட ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.ரான் ஈதன் யோகனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் படத்தின் கதைக்களத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார்.ஒரு சிக்கலான கதையை புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் புது இயக்குநர் இன்னாசி பாண்டியன்