குறும்பட இயக்குனர் த.க.தெ.ம.கி (செல்வ அன்பரசன்) முழுநீள திரைப்படம் எடுக்க பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார் ஆனால் அந்த தயாரிப்பாளர் கதையை மட்டும் தரும்படி கேட்கிறார். இதனால் சின்ன பட்ஜெட் கதை ஒன்றை தயாரித்து அதை வேறு தயாரிப்பா ளரிடம் சொல்ல பேய் கதை என்பதால் இயக்குனர் வாய்ப்பு தர சம்மதிக்கிறார். ஸ்கிரிப்ட்டுடன் ஒரு மலைப்பகுதிக்கு வந்து ஷீட்டிங் தொடங்குகிறார்கள். அங்குள்ள மர்ம பங்களாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடும்போது அங்கிருக்கும் பேய் அவர்களுக்கு உதவ முன்வருகிறது. அதை இயக்குனர் ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் பேய் மறைமுகமாக படப்பிடிப்புக்கு உதவி படத்தை முடிக்கிறது. அதை இயக்குனர் தக தெ ம ஹி ஏற்க மறுக்கிறார். கோபம் அடையும் பேய் , படமாக் கப்பட்ட முக்கிய காட்சிகளை அழித்து விட்டு காணாமல் செல்கிறது. இதனால் இயக்குனர் அதிர்ச்சி அடைகிறார். அடுத்து நடந்தது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.நாயகனாக நடித்திருக்கும் கெளசிக் எப்போதும் போல் நடனம், சண்டைக்காட்சிகள் என இரண்டிலும் முத்திரை பதித்திருக்கிறார். அவருக்காகவே சண்டைக்காட்சி வைத்தது போல் இருந்தாலும் அது படத்திற்கும் பலம் சேர்க்கிறது.நாயகியாக நடித்திருக்கும் சந்தியா ராமச்சந்திரன் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.எழுதி இயக்கியிருக்கும் செல்வ அன்பரசு, பேய் படத்தை காமெடியாக சொல்வதோடு, சினிமா கலைஞர்களின் வாழ்க்கையை குறிப்பாக முதல் படம் இயக்குபவர்களின் வலிகளை சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.பேய காணோம் – சிரித்துவிட்டு வரலாம்
Peiya Kaanom
0
184