27.3 C
New York
Wednesday, May 22, 2024

Buy now

A Rom-Com Entertainer ENJOY

சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும்,  கருத்து  வெளிப்பாட்டு நன்மைகளையும்,  சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும், இளம் பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக  இதனைப் பயன்படுத்தினார்களா? இல்லை.. சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கப்பட்டார்களா?  என்பதே இந்த ‘என்ஜாய்’ சொல்லும்  கதை.இன்றைய பல இளைஞர்களின் மனோபாவம், அது ஆணாக இருக்கட்டும் இல்லை பெண்ணாக இருக்கட்டும்.. திருமணத்திற்கு முன்பே ஜாலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது அதற்கேற்றபடி மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பர வாழ்க்கை, நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்களை அந்த மாயைக்குள் தூண்டில் போட்டு இழுக்கிறது. இந்த விஷயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைவருமே இன்றைய இளைஞர்களின் தாகம், மோகம், வேகம், அதனால் ஏற்படும் குழப்பம் என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.காதலியிடம் இருந்து ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்காதா என சதா ஏங்கியபடியே தனது ஐஏஎஸ் படிப்பில் தடுமாறும் மதன்குமார், பார்க்கும் பெண் எல்லாம் தன்னுடன் டேட்டிங் வர மாட்டாளா என நினைக்கும் விக்னேஷ், திருமணத்திற்கு முன்பே அந்தரங்க பிரச்சனையில் சிக்கும் ஹரிஷ்குமார் என மூன்று கதாநாயகர்களுக்குமே படத்தில் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.இளவட்டங்களாக வரும் பத்மகுமார், டான்ஸர் விக்னேஷ், ஹரிஷ்குமார் மூவரும் இரட்டை அர்த்த வசனங்கள் ஓவரோ ஓவர். அதுவும் கொடைக்கானலில் ஜி வி அபர்ணா, நிரஞ்சனா, சாருமிசா ஆகியோருடன் மேல படுக்கிறீங் களா கீழ படுக்கிறீங்களா என்று டைரக்டாவே டயலாக் பேசி ஷகிலா பட ரேஞ்சுக்கு சென்றுவிடு கின்றனர்.எல்லாவற்றுக்கும் பரிகாரம் செய்வதுபோல் கிளைமாக்ஸில் மூன்று ஹீரோயின்களுக்கும் பெண் டாக்டர் அட்வைஸ் தருவது போல் காட்டி ஒப்பேற்றியிருக் கின்றனர். இரட்டை அர்த்த வசனங்கள் இளசுகளை ஈர்க்க குறி வைத்து எழுதி இருப்பதாக அறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும்  இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவும் தூண்டும்.  சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்துவிடும் ஆயுதமாகவும் இருக்கும். இளைஞர்கள் கொண்டாடினால்தான் எந்த படமும் வெற்றி பெறும். அந்த வகையில் எங்களின் இந்த ‘என்ஜாய் ‘ படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” என்கிறார் அறிமுக இயக்குநாான பெருமாள் காசி

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE