பி எஸ் சி கெமிஸ்ட்ரி படித்த பட்டதாரி இளைஞன் ஸ்ரீ தண்ணீர் கேன் வாட்டர் கம்பெனியில் வேலை செய்கிறார். திடீரென்று சூப்பர் வைஸர் ஸ்ரீயை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறார். அடுத்து பணக்கார வீட்டில் பக்கவாதம் பாதித்து படுக்கையில் கிடக்கும் முதியவரை கவனித்துக்கொள் ளும் வேலைக்கு செல்கிறார் ஸ்ரீ . அந்த முதியவர் ஒரு விஞ்ஞானி. அவர் அதிசய மருந்து கண்டுபிடித் திருக்கிறார். 60 வயதுள்ளவர் அந்த மருந்தை சாப்பிட்டால் அவர் 40 வயதுள்ளவரின் சக்தியை பெற முடியும். ஆனால் அதில் பக்க விளைவு அதிகம் இருப்பதால் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த விஷயம் ஸ்ரீக்கு தெரிய வருகிறது. அதிசய மருந்தை திருடி விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில் ஸ்ரீயிடம் உள்ள பணத்தை அடைய வீட்டு வேலைக்கார பெண் வில்லி யாக மாறி ஸ்ரீயை வெளுக்கிறார். அதேசமயம் டாக்டராக நடிக்கும் உதவி சைன்ட்டிஸ்ட் அதிசய மருந்தின் ஃபார்முளாவை கைப்பற்ற எண்ணுகிறார். இவரும் வீட்டு வேலைக்காரியுடன் கூட்டு சேர்ந்து ஸ்ரீயை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். அடுத்து நடந்தது என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.
ஸ்ரீ & வசுதா ரொமான்ஸ் செம கிக்.. வசுதாவின் வளைவு நெளிவு இளசுக்கு மஜா. ஆனால் இவர் திடீரென ஆக்சன் செய்வது வேற லெவல் ட்விஸ்ட்..சாம்ஸ்.. ராம்ஜீ… பாலாஜி வெங்கட்ராமன் ஆகியோரின் கேரக்டர் கச்சிதம்..சிறிய கதாபாத்திரம் என்றாலும் முக்கியமான ட்விஸ்டுக்கு காரணாமாக அமைக்கிறார் சாம்ஸ்.இவர் எடுக்கும் ரிவெஞ்ச் காட்சிகள் அல்டிமேட். சிபு சுகுமாரின் பின்னணி இசை பல இடங்களில் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.சதீஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.