9.2 C
New York
Saturday, April 27, 2024

Buy now

The Warriorr

சத்யா (ராம் பொதினேனி) ரயிலில் இருந்து புதிதாக கர்னூலுக்கு வருகிறார், உயிரைக் காப்பாற்றும் மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளுடன். இருப்பினும், இந்த ஊரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், தனது எம்பிபிஎஸ் சான்றிதழை விட அதிகம் தேவை என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். அவர் வாழ்க்கையில் அவரைப் பற்றி அல்லது தங்களைப் பற்றி பேச விரும்பும் இரண்டு பேர் உள்ளனர். ஒன்று அவரது காதல் ஆர்வலர், விசில் மகாலட்சுமி (கிருத்தி ஷெட்டி) என்ற ஆர்ஜே, ஹீரோவை உயர்த்துவது அல்லது அவருடன் டூயட் பாடுவது மட்டுமே அவரது ஒரே வேலை. மற்றொரு நபர் குரு (ஆதி பினிசெட்டி), கர்னூலை இரும்புக்கரம் கொண்டு நடத்தும் ஒரு கும்பல். அங்கு நடக்கும் எல்லாவற்றிலும் அவர் கை உள்ளது, உள்ளூர் போலீசார் எந்த உதவியும் செய்யவில்லை. சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமானால், சத்யா தந்திரோபாயங்களை மாற்ற வேண்டும் என்பதை உணரும் வரை சூழ்நிலைகள் மோசமடைகின்றன. அவரை ஒரு போலீஸ் அதிகாரி ஆக்குவதற்கு என்ன தூண்டுகிறது மற்றும் அவர் நகரத்தை எப்படி ‘சுத்தம்’ செய்கிறார் என்பதுதான் கதை.

ராம், அழகும் இளமையும் கம்பீரமும் கொண்ட வாரியர். எங்கள் தளபதி தெலுங்கு பக்கம் போன நேரமாப்பார்த்து நம்மூருக்குள் நுழைந்திருக்கும் வாரியர். நிச்சயமாக நம் ரசிகர்கள் இவரை வாரி அனைத்துக்கொள்வார்கள். காதல் காட்சியிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

கீரித்தி ஷெட்டி, மதுரைக்கார விசில் மகாலட்சுமியாக வசீகரித்திருக்கிறார். என்னது குருமாதிரி காளை இருக்கா… என்னடா சொல்றீங்க… அந்த ஒரு லந்து வசனம் போதும், அட இவுக நெசமாவே மதுரைக்காரவுகதாம்பா என்று நம்ப வைத்து விடுகிறார்.ஆதி, யாருமே எதிர்பார்க்காத வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் கதிகலங்க வைக்கிறார். அவரை விட்டால், இந்த உலகை மரங்களாலேயே நிறைத்து விடுவார், ஆனால் ஒன்று அவரைத்தவிர அவரது குடும்பத்தினர் தவிர சுவாசிக்க ஒரு மனுஷப்பயலுகளும் இருக்கமாட்டாய்ங்க. டிஸ்கஷன்ல இந்த காட்சியை சொன்னவரை தேடிக்கண்டு பிடித்து பாராட்ட வேண்டும்.

படத்தில் மற்றொரு ஹீரோவாக மாறியிருக்கிறார் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். பாடல்களுக்கு ஆட்டம்போட வைப்பதுடன் பின்னணி இசையிலும் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறார்.சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு வண்ணம் தீட்டி உள்ளது.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE