0.7 C
New York
Tuesday, January 14, 2025

Buy now

spot_img

“Foreign Sarakku”

குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலையும், அந்த பதிலுக்கும் ‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்புக்கும் உள்ள தொடர்பையும் பரபரப்பான திரைக்கதையோடும், பல ட்விஸ்டுகளோடும் சொல்லியிருக்கிறார்கள். அந்த குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்திற்கு வருகிறார்? அவர் எதற்காக ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? அந்த ரவுடி கும்பலிடம் அவர் சிக்கிகொண்டாரா? இல்லையா? என்பதுதான் இந்த ஃபாரின் சரக்கு ‘
திரைப்படத்தின் மீதி கதை.திரைப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் திரைப்படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.வில்லனாக நடித்திருக்கும் மகாலிங்கம் வில்லனுக்கு உரிய பாணியில் நடிக்க முயற்சித்துள்ளார்.திரைப்படத்தில் நடித்த அனைவரும் புதுமுகம் என்பதால் கதாப்பாத்திரங்களை நினைவில் வைத்திருப்பது பார்வையாளர்களுக்கு சற்று கடினமாக உள்ளது.

மகாலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் உசேன், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். சுரேந்தர் சுந்தரபாண்டியனும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் கதாநாயகிகளாக அல்லாமல் கதையின் நாயகிகளாக இயல்பாக நடித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார்கள்.பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் பீஜியம் மிரட்டல்.ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. கதைக்கு ஏற்றபடி ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜன் பயணித்திருந்தாலும், இரவு காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கூடுதல் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.நேர்த்தியான எடிட்டிங் மூலம் படத்தின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கும் எடிட்டர் பிரகாஷ்ராஜ், ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.முன்னணி ஹீரோக்கள் நடிக்க வேண்டிய சிறப்பான கதைக்கருவை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை பலவித ட்விஸ்டுகளோடு சொல்லி படம் முழுவதையும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE