21.3 C
New York
Saturday, September 21, 2024

Buy now

spot_img

Maniratnam starts shooting for PonniyinSelvan in Thailand

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு பாங்காக்கில் துவக்கம்.மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே சினிமாத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இவர்களுக்கு மட்டுமல்லாது இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படம் என்பதால், தன் கனவை நனவாக்கும் விதமாக 10.12.2019 அன்று தாய்லாந்து பாங்காக்கில் படப்பிடிப்பை துவங்கிவிட்டார். இங்கு முதல் கட்ட படப்பிடிப்பு ஒரு மாதங்களுக்கு மேல் நடைபெறும். அதற்காக கார்த்தி, 'ஜெயம்' ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் சென்றிருக்கிறார்கள். இதற்கு பிறகு ஒருவர் பின் ஒருவராக மற்ற நட்சத்திரங்களும் இணைந்து கொள்வார்கள். முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெறும்.'பொன்னியின் செல்வன்' படத்திற்காக விக்ரம், கார்த்தி, 'ஜெயம்' ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்.சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின் காக்குமனு , கிஷோர் மற்றும் பலர் ஆகியோர் நடிக்கிறார்கள்.தொழில்நுட்ப கலைஞர்கள்தயாரிப்பு நிறுவனம் -லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ்இயக்கம் - மணிரத்னம் , திரைக்கதை - மணிரத்னம் & குமரவேல்வசனம் - ஜெயமோகன்இசை - ஏ.ஆர்.ரகுமான்ஒளிப்பதிவு - ரவி வர்மன்படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்தயாரிப்பு உருவாக்கம் - தோட்டா தரணி & வாசிக் கான்சண்டை பயிற்சி - ஷாம் கௌஷல்ஆடை வடிவமைப்பு - ஏகா லக்கானிஅலங்காரம் - விக்ரம் கைக்வாத்வடிவமைப்பு - ராகுல் நந்தாநடனம் - பிருந்தாPro - ஜான்சன்நிர்வாகம் தயாரிப்பு - சிவா அனந்த்தயாரிப்பு - சுபாஸ்கரன் & மணிரத்னம்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE