2.1 C
New York
Thursday, December 5, 2024

Buy now

spot_img

A son fulfills his father’s Dream -Champion Vishwa

சாம்பியன் படம் இன்று ரிலீஸாகி மக்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கிறது. அதன் கதாநாயகன் விஷ்வா பற்றிய விமர்சனமும் நல்ல மதிப்பை கொடுத்துள்ளது. அவரிடம் சிறிய பேட்டி:
உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

சின்ன வயசிலிருந்தே ஸ்போர்ட்ஸ் எனக்கு ப்ரியம் அதிகம். 3 வயசு முதல் 8 வயசு வரைக்கும் நீச்சல் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் அப்பா ஸ்குவாஷ் விளையாட்டை அறிமுகப்படுத்தி வெச்சார். அதில இண்டர்நேஷனல் போட்டிகளிலெல்லாம் கலந்துகொண்டேன். 15 வயசுக்கப்புறம் எனக்கு சினிமாக்குள்ள போகலாம்னு தோணுச்சு. சினிமா யாருக்குத்தான் பிடிக்காது. அதனால குறும்படங்கள் சில எடுத்தேன். அப்புறம் நியூயார்க் ஃபிலிம் அகாடமில ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படிச்சேன். இங்கு வந்து, நெறைய முன்னணி இயக்குநர்களிடம் 4 வருஷம் முயற்சி பண்ணேன். புதுமுகம்கிறதனால யாரும் பெரிசா வாய்ப்பு தரல. அப்புறம் R K சுரேஷ் என்னோட தாய் மாமா அவர் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு நடத்திட்டிருந்தார். நம்மளும் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு. சுசீந்திரன் சார் ஏற்கனவே எனக்கு தெரியும். நடிகர் சூரி எங்க குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் அவர் மூலமா தான் சுசீந்திரன் சார பார்த்தேன். அவர் சாம்பியன் படத்துக்கு ஆடிசன் எடுத்தார். நான் ஸ்போர்ட்ஸ் மேன்கிறதால சரி முயற்சி பண்ணலாம்னு புழல் போய் ஃபுட்பால் பிளேயர் சாந்த குமார் கிட்ட ஒரு வருஷம் டிரெய்னிங் எடுத்தேன். 6 மாசம் டிரெய்னிங் போய்ட்டிருக்கும்போது வெளி தயாரிப்பாளர் படத்த விட்டுப் போய்ட்டாங்க. அப்பதான் அம்மா உள்ள வந்தாங்க, சுசி சாரும் பையன் நிறைய கஷ்டபட்டிருக்கான் இவன வச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணி ஓகே சொன்னார். அவர் தான் என் குரு அவராலதான் இன்னக்கி இங்க இருக்கேன். அவர் தான் எல்லாமே.

இந்தப்படத்தில் உங்களுடைய கதாப்பாத்திரம் எந்த மாதிரியானது ?

வடசென்னையில ஏழ்மையில வாழுற ஒரு ஃபுட்பால் விளையாடுற பையன். வட சென்னையில ஒரு வருசம் இருந்திருக்கேன். நல்லா விளையாடுவாங்க ஆனா ஷூ வாங்கவே காசு இருக்காது. ஜெர்ஷி வாங்க காசு இருக்காது. விளையாடப்போகவே நிறைய பிரச்சனைகள் வரும் அதெல்லாம் தாண்டி எப்படி சாம்பியன் ஆகிறான்கிறது தான் கதை. அத ரியலா பிரமாண்டம் இல்லாம அவங்க வாழ்வியலோடு சினிமாவுக்கு ஏத்தமாதிரி சொல்லிருக்கார்.

ஃபுட்பால் படம் நிறைய வந்திருக்கு இந்தப்படத்தில் என்ன வித்தியாசம் ?

சுசி சாரோட பலமே ஸ்போர்ட்ஸ் தான் வெண்ணிலா கபடி குழு, ஜீவா. அதே மாதிரி நான் மகான் அல்ல, பாண்டியநாடு ரெண்டும் ரெவெஞ்ல பலமான படம் இந்த இரண்டு பலத்தையும் ஒன்ணா ஒரே திரைக்கதையில இந்தப்படத்தில தந்திருக்கார். வட சென்னையில இருக்கிற பையன் எப்படி வளர்கிறான். அப்புறம் இது அப்பா பையன் கதை அப்பாவோட ஆசைய ஒரு பையன் எப்படி நிறைவேத்துறான்கிறது இதோட கதை.

பிகில் விஜய் நடிப்பில் ஃபுட்பால் படம் இப்போ கதிர் நடிப்பில் ஜடா வந்தது அதைத் தாண்டி இதில் என்ன இருக்கு ?

அது எல்லாமே பிரமாண்டம் அப்புறம் பெரிய ஹீரோக்கள் அந்த மாதிரி படங்கள் நடிப்பது வடசென்னை பசங்களுக்கு பெருமைதான். கதிர் அண்ணா நடிச்சிருக்கார் எல்லாம் தாண்டி சொல்ல இன்னும் நிறைய கதைகள் இருக்கு. வடசென்னையே ஒரு மினி ஃப்ரான்ஸ்தான். ஃபுட்பால் அங்க அவ்வளவு ஃபேமஸ்.

இதில் ரொமான்ஸ் காமெடி எல்லாம் இருக்கா ?

இரண்டு ஹீரோயின் இருக்காங்க, ஸ்கூல் கேரக்டர் சௌமிகானு ஒரு புது பெண் பண்ணியிருக்காங்க இதுல தான் அறிமுகம். அப்புறம் டப்மாஸ் மிருணாளினி காலேஜ் லவ்வரா வர்றாங்க அவங்க இந்தப்படத்தில் இருக்குறது பெரிய ஸ்பெஷல்.

ஸ்கூல், காலெஜ் ரெண்டும் நீங்களே பண்ணியிருக்கீங்க ?

ஆமா சார் 5 வயசு பையனா ஒரு சின்ன பையன் பண்ணியிருக்கார் ஸ்கூல், காலேஜ் கேரக்டர் நான் பண்ணியிருக்கேன்.

அப்பா ஆசைய நிறைவேத்துற பையன் தான் கதையா ?

அப்படி மட்டும் சொல்லிட முடியாது. அதுவும் ஒரு நாட். அப்பாவா மனோஜ் பாரதி சார் நடிச்சிருக்கார் அவர் இந்தப்படத்துக்கு பெரிய ஆசிர்வாதம். அவர் ஆசைய நிறைவேத்துறதுல என்ன தடங்கல் வருது, அப்புறம் நரேன் சார் எப்படி உள்ள வர்றார் இதெல்லாம் தான் கதை. படம் நரேன் சார் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கார். அப்புறம் கமர்ஷியல் அம்சமும் இதில் இருக்கு எல்லாத்தையும் கலந்து கொடுத்திருக்கார் சுசி சார்.

நரேனுக்கு இந்தப்படத்தில் என்ன கேரக்டர் ?

நரேன் சார் கோச்சா வர்றார். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ மாதிரி. நாலைந்து முக்கிய பாத்திரங்கள் இந்தப்படத்தில் இருக்கு நரேன் சார் ஒத்துகிட்டு நடிச்சதே பெரிய விசயம் ஒரு புது பையன் போஸ்டர்ல நடுவுல இருக்கும்போது ஓரமா இருக்க பெரிய மனசு வேணும்.

ஷூட்டிங் எங்க நடந்தது ?

புழல் , செம்மஞ்சேரி சென்னையை சுற்றி தான் எல்லாமே பண்ணிருக்கோம்.

சினிமாவில் வர என்ன காரணம் ?

9 to 5 வேலை மேல எனக்கு விருப்பம் இல்ல. சினிமாவில் நிறைய அனுபவம் கிடைக்கும். இப்ப சாம்பியன்ல நான் ஃபுட்பால் பிளேயர். அவனா நான் வாழுறேன் அவனோட அனுபவம் எனக்கு கிடைக்கும். அடுத்த படத்தில் பிச்சைக்காரனா நடிக்கலாம் அவங்களோட அனுபவம் என் உடம்புக்குள் போய் வரும் இது அந்த அனுபவம் எனக்கு கிடைக்கும் இது எனக்கு பிடிச்சிருக்கு. அதனால சினிமா பிடிச்சிருக்கு.

உங்களுக்கு கோச்சிங் தந்தவர் என்ன சொன்னார் படம் பார்த்து ?

அவரும் படத்தில் நடிச்சிருக்கார். படம் பார்த்து நீ கஷ்டபட்டதுக்கு பலன் கண்டிப்பா கிடைக்கும்னு சொன்னார். அவருக்கு பிடிச்சது.

டயலாக் டெலிவரி, வடசென்னை பாஷை எப்படி பண்ணீங்க ?

எனக்கு நடிக்கவே தெரியாது. சுசி சார் பயங்கரமா நடிப்பார் இந்தப்ப்டத்தில் நடிச்சிருந்தார் படத்துக்கு ஒத்துவரலைனு தூக்கிட்டோம் அவர் நடிக்கிறத, சொல்லிக்கொடுக்கிறத 10 சதவீதம் பண்ணிணாலே போதும் நல்லா வந்துடும்.

நீங்க பாடல் பாடியிருக்கீங்களே ?

எனக்கு இசை மேல காதல். 300 பாடல்களுக்கு மேல போட்டு வச்சிருக்கேன் ஒரு நாள் இத கேள்விப்பட்டு சுசி சார் கேட்டார் அவருக்கு போட்டு காட்டினேன் அப்புறம் படத்துல அவர் தான் பாட வச்சார்.

ஃபுட்பால் குரு யார் ?

எனக்கு டிரெய்னிங் கொடுத்த சாந்த குமார் சார் தான் அவர் ஏழைப்பசங்கள் நிறைய பேருக்கு கத்து கொடுத்து வளர்த்து விட்டுருக்கார். அவரோட பேரைத்தான் நரேன் சாருக்கு வச்சிருக்கோம். அவரோட கேரக்டர் தான் நரேன் சார் பண்ணியிருக்கார்.

அடுத்த படம் இசையமைப்பீங்களா ?

அது அமையனும் நம்மளா பண்ணக்கூடாது நடிக்க வந்திருக்கேன் அத முதல்ல ஒழுங்கா பண்ணனும் நல்ல நடிகனா வளரனும். அப்புறம் பாக்கலாம். இப்ப சாம்பியன் படம் பாத்துட்டு நல்லா இருக்குன்னு விமர்சனம் வருது. என் நடிப்பை பாத்துட்டு நிறைய பாராட்டு வருது. எல்லோருக்கும் நன்றி.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE