21.9 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

kochadaiiyaan RELEASE ON 23RD MAY 2014.

"KOCHADAIIYAAN"

RELEASE ON 23RD MAY 2014.
Kochadaiiyaan starring Rajinikanth, Deepika padukone, R.Sarath kumar, Aathi, Jackie shroff, nasser, shobana, rukmini..Music by AR RAHMAN, written by KS Ravikumar, directed by Soundarya Rajinikanth ashwin and being produced in 6 Indian languages (Tamil, Telugu, Hindi, Marathi, Punjabi, and Bhojpuri) in addition to English is being released in 2D as well as 3D versions all over the world. All post production work has been completed and the film is censored in all the 6 languages ‎in 2D & 3D versions. The film is now ready for delivery and is releasing on 23rd may 2014.

Earlier, rendering ‎of 3D versions took longer than anticipated, which was the main reason for rescheduling the release of the film. Besides. there was a sudden demand for additional 2000 screens, all over the world, just 2 days before release after seeing the extraordinary response for the advance booking world over (1,25,000 tickets were sold in just 2 hours in chennai city only), To avoid last minute delay on the screening material reaching theatres. The decision was taken to reschedule the film to 23rd may 2014 to reach prints / content on time world over.
Eros international is a giant are presenting the film and they are releasing ‎ it world wide with Media one global entertainment.
We request the media to avoid any incorrect or wrong information to the public on the release of the movie. The film would be released with all its Glamour on 23rd may 2014 as a summer bonanza.

கோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாவது உறுதி..!

- தயாரிப்பாளர் அறிவிப்பு

ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் - கோச்சடையான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் திரைப்படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி,பஞ்சாபி,போஜ்பூரி,மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உடன் ஆர்.சரத்குமார், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளனர். படத்தொகுப்பு - ஆண்டனி.
கோச்சடையான் 3டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி உட்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில்நுட்பக் காரணங்களினால் தேதியை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, மாற்று தேதியையும் தெளிவுபடுத்தி இருந்தோம்.
இந்நிலையில், சில பத்திரிகை மற்றும் இணையதளங்களில் கோச்சடையான் படத்தைப் பற்றி உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.

கோச்சடையான் திரைப்படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது.
மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது.

3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.
இது தவிர, ஏற்கனவே சுமார் 4000 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டநிலையில், சென்னையில் முன்பதிவு துவங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.
அதன் பிறகு மேலும் 2000 திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன் வந்துள்ளன.
3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டது.
ஈராஸ் இண்டர்நேஷனல் என்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள கோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி அன்று வெளியாக தயார்நிலையில் உள்ளது.
ஈராஸ் இண்டர்நேஷனல் என்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் படம் குறித்து வெளியான செய்திகள் தவறானவை.
அவற்றை நம்ப வேண்டாம் என்றும், ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி கோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE