no images were found
“வானவராயன் வல்லவராயன்”
பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்”
இதில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார்.
கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்கிறார்.
மற்றும் சந்தானம், சௌகார்ஜானகி, கோவைசரளா, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, எஸ்.பி.பி.சரண், சி.ரங்கநாதன், மீராகிருஷ்ணன், பாவா லட்சுமணன்,பிரியா, கிருஷ்ணமூர்த்தி, ஷண்முகசுந்தரம், கொட்டாச்சி, , லொள்ளுசபாமனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் ராஜமோகன் கூறியது...ஜாலியான அண்ணன், தம்பிகளைப் பற்றிய படம் இது. இரண்டரை மணி நேரத்திற்கு உங்களை யாரையும் அழ விடாமல் சிரிக்க வைக்கிற படமாக வானவராயன் வல்லவராயன் இருக்கும்.
மோனல் கஜாரின் அழகும், இளமையும் படத்திற்கு இன்னொரு சிறப்பம்சம்.யுவன் சங்கர் ராஜா இசை கழுகு படத்திற்கு எவ்வளவு பலம் சேர்த்ததோ அதை விட இதற்கு பலம் அதிகம் சேர்க்கும்.
சௌகார் ஜானகியை எல்லோருக்கும் மிடுக்கான கதாபாத்திரமாகத் தான் தெரியும்.இதில் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி இருக்கிறார். ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருக்கும் அண்ணன், தம்பி அஞ்சு நிமிடம் சேர்ந்து இருந்தால் பத்து நிமிடத்திற்கு சண்டை போட்டுக் கொள்வார்கள் அதில் அண்ணனுக்கு முப்பது முறை காதல் தோல்வி. 31 வது முறை ஒரு காதல் மலர்கிறது அந்த காதல் ஜெயித்ததா?இல்லை தம்பியின் பாசம் ஜெயித்ததா என்று ஜாலியான கதையாக வானவராயன் வல்லவராயன் உருவாகி இருக்கிறது என்றார் ராஜமோகன்.