19.7 C
New York
Wednesday, October 9, 2024

Buy now

spot_img

uruthi koll review

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, கோலி சோடா கிஷோர், மேக்னா , காளி வெங்கட்,
தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்க, அய்யனார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘உறுதி கொள்’
பார்வை கொள்ளலாமா ? பேசுவோம் .
செஞ்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம் . அரசு மேல் நிலைப் பள்ளிக் கூடம் .
பிளஸ் 2 படிக்கும் மக்கு மாணவனுக்கும் (கிஷோர்) பத்தாவது படிக்கும் படிப்பாளி மாணவிக்கும் (மேக்னா) காதல் . மாணவனுக்கு ஒரு நண்பன் .
மாணவனின் தங்கையும் மக்கு . அவளும் நன்றாக படிக்கும் ஒரு மாணவனும் விரும்புகிறார்கள் . அவனுக்கும் அண்ணனுக்கும் ஆகாது .
மக்கு மகன் மீது அப்பாவுக்கு கோபம் .
நன்றாக படிக்கும் மாணவியின் அப்பாவுக்கு தன் மகள் மக்கு மாணவனை விரும்புவதால் கோபம் .
அந்த மக்கு மாணவன் மற்றும் மற்றும் தங்கை இருவருக்கும் ஊர்ப் பண்ணையாரின் ஊதாரி மகனுக்கும் பிரச்னை .
செஞ்சிக் கோட்டையின் தனிமையைப் பயன்படுத்தி அத்து மீறும் ஜோடிகளை மிரட்டி பணம் நகை பிடுங்குவதோடு பெண்களை சீரழிக்கும் ஒரு சமூக விரோத கும்பல் .
ஒரு நிலையில் பள்ளி மாணவிகள் பலர், அப்புறம் தங்கை , பின்னர் காதலி எல்லோரும் காணமல் போகிறார்கள் . பழியும் குற்றமும் மாணவன் மீதே விழுகிறது .
மாணவிகளுக்கு என்ன ஆச்சு ? அவன் என்ன செய்தான் ? அப்புறம் என்ன ஆச்சு? என்பதே உறுதி கொள் .
ஒரு இடைவேளைக்குப் பிறகு கிராமத்துப் பள்ளி மாணவ மாணவியரின் காதல் சொல்லும் படம் . அந்தக் காலத்தில் டி. ராஜேந்தர்,
கல்லூரி மாணவிகளை வைத்து எடுத்தது போன்ற வகுப்பறைக் காட்சிகளை பள்ளி மாணவ மாணவியரை வைத்து எடுத்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் அய்யனார்
அந்த மாணவ மாணவியரின் பால்ய வயது நட்பு , அப்புறம் பள்ளி பிராய பழக்கம் இவற்றை சுவாரஸ்யமாக சொல்கிறார் இயக்குனர் .
அதில் பல இடங்களில் வெள்ளந்தியான காமெடி ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது
குறிப்பாக தேர்வு சம்மந்தமான காட்சிகளில் வரும நகைச்சுவை சிறப்பு . மிக இயல்பாக குறும்பும் உற்சாகமும் கொப்பளிக்கிறது
அது சரி எந்த வருஷம் பத்தாவது மற்றும் பனிரெண்டாவது பொதுத் தேர்வை ஒரே நாளில் நடத்துறாங்க இயக்குனரே …?
அதுவும் பத்தாவது மாணவியும் பனிரெண்டாவது மாணவரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து பொதுத் தேர்வு எழுதறாங்க ? ம்ம்ம்ம்ம்ம்..??
பால்ய வயது அண்ணன் தங்கை பாச காட்சிகளும் அதை கடைசியில் சரியாகப் பொருத்தும் விதமும் சிறப்பு .
செஞ்சிக் கோட்டை போன்ற இடங்களில் பாலியல் ரீதியாக அத்து மீறுவோருக்கு சமூக விரோதிகளால் வரும் ஆபத்துகளை சொல்வது பாராட்டுக்குரியது .
அறிமுக இசையமைப்பாளர் ஜூட் லின்னெகர் இசையில் மணி அமுதவன் எழுதிய பாடல்கள் இனிமை. நான் சிவன் என்ற பாடல் இன்னும் ஒரு படி மேல்!
நாயகனாக நடித்து இருக்கும் கிஷோரின் நடிப்பு ஒகே .
மேக்னா மட்டுமல்லாது மாணவிகளாக நடித்து இருக்கும் எல்லொருமே நன்றாக நடித்துள்ளனர் .
ஒரு சிலர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் ஒரு நிலையில் அதுவும் ரசிக்கும்படி ஆகிவிடுகிறது .
எங்கே துவங்கி எங்கோ பயணித்து எப்படியோ முடிகிறது திரைக்கதை . இது எதை சொல்ல வந்த படம் என்பதில் ஒரு தெளிவும் அதற்கேற்ற கதைப் போக்கும் இல்லை .விளைவு ? தறிகெட்டு ஓடுகிறது படம் . இதுதான் படத்தின் பெரிய பலவீனம் . கிளைமாக்ஸ் ஓவர் டோஸ் .
உறுதி கொள் …. இன்னும் பிடிமானம் இருந்திருக்க வேண்டும்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE