19.1 C
New York
Friday, May 3, 2024

Buy now

Ippadai Vellum Movie Review

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி, மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் நடிப்பில், ரிச்சட் எம். நாதன் ஒளிப்பதிவில் இம்மண் இசையில் கௌரவ நாராயணன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் இப்படை வெல்லும் .
கௌரவ் நாராயணன் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சிறந்த படபடத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் தன் முதல் இரண்டு படங்களை போல ஒரு சிறந்த த்ரில்லர் படத்துடன் வந்து வெற்றி கண்டுள்ளார் தெளிந்த நீரோடை போல ஒரு சிறந்த திரை கதை மூலம் மிக பெரிய வெற்றி படம் என்று சொல்லும் அளவுக்கான படத்தை இயக்க்கியுள்ளார்
தன் கதைக்கு என்ன தேவையோ அதை தவிர தேவை இல்லாமல் கதையோ ஓட்டத்தை விட்டு வெளியில் போகாமல் மிக சிறப்பாக இயக்கியுள்ளார் அதே இந்த கதைக்கு தேவையான கதாபாத்திரம் நட்சித்திரங்கள் என்று மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார் கௌரவ படங்கள் என்றாலே ஒரு திரில்லர் அதுவும் நம்மை மிகவும் சுவாரிசைப்படுத்துவார் அந்த வகையில் இதிலும் தன் திரைக்கதையில் நம்ம நாற்காலி நுனிக்கு வரவைக்கிறார் என்று சொல்லணும்.

திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக இருக்கிறார் ராதிகா. இவருடைய மகனான உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம், மஞ்சிமா மோகனின் அண்ணனான ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவருகிறது.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்.கே.சுரேஷ், மஞ்சிமா மோகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர்களை பிரிக்கவும் முயற்சி செய்கிறார். இந்நிலையில், உதயநிதியும், மஞ்சிமா மோகனும், பதிவு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.
இதற்கிடையில், தீவிரவாதியான டேனியல் பாலாஜி வட இந்தியாவில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு, சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக வருகிறார். எதிர்பாராத விதமாக, உதயநிதியையும், சூரியையும் சந்தித்து செல்கிறார். இவர்களின் சந்திப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி விட, டேனியல் பாலாஜிக்கும், உதயநிதிக்கும் சம்மந்தம் இருப்பதாக கருதி போலீஸ் அவர்களை கைது விடுகிறார்கள்.
இதுதான் சமயம் என்று உதயநிதியை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இறுதியில் ஆர்.கே.சுரேஷின் என்கவுண்டரில் இருந்து தப்பித்து, டேனியல் பாலாஜிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நிருபித்தாரா? மஞ்சிமா மோகனுடன் இணைந்தாரா? டேனியல் பாலாஜியை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் உதயநிதி முந்தய படங்களுக்கு மிகவும் ஒரு முன்னேற்றம் என்று தான் சொல்லணும் மனிதன் படத்துக்கு பிறகு மிகவும் ஒரு வித்தியாசமான ஒரு நடிப்பு அதே போல நடனம் என்று எல்லாத்திலும் அருமை என்று சொல்லும் அளவுக்கு நம்மை வியக்க வைக்கிறார் . தமிழ் சினிமாவின் முழு நாயகனாக தயார் ஆகிவிட்டார் என்று தன சொல்லணும். இயக்குனர் நடிகர் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக நடித்துள்ளார் .
மஞ்சிமா மோகன் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணனுக்கு பயப்படுவது, துணிச்சலாக திருமணம் செய்து கொள்ள தயாராகுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். தமிழுக்கு மிக சிறந்த நடிகையாக நிச்சயம் வளம் வருவார்.
ராதிகா என்றால் நடிப்புக்கு சொல்லவா வேணும் அப்படி ஒரு நடிப்பு மிக சிறந்த தைரியசாலி என்று தான் சொல்லணும் பஸ் ஓட்டும் டிரைவ்வர போலவே இருக்கிறார்
சூரியின் காமெடி இப்படத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது. உதயநிதியுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்க வைத்திருக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிரியாகவும், வில்லத்தனத்திலும் மிரட்டியிருக்கிறார். அதுபோல் தீவிரவாதியாக வரும் டேனியல் பாலாஜியும் சிறப்பாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார். இயக்குனர் கவுரவ் சிறப்பு தோற்றத்தில் வந்து கலக்கி இருக்கிறார்.
தூங்கா நகரம், சிகரம் தொடு, ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த, கவுரவ் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், போக போக திரைக்கதை சூடுபிடிக்கிறது. உதயநிதி, சூரி, டேனியல் பாலாஜி என ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத மூன்று பேரின் வாழ்க்கையை இணைத்து, ஒரு ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்குவது சவாலான காரியம்தான். அதற்கென பொருத்தமான கதையையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘இப்படை வெல்லும்’ நிச்சயம் வெல்லும்.Rank 4/5

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE