STUDIO GREEN FILMS K.E. GNANAVEL RAJA ‘PRODUCTION NO.9’
‘SIVAKARTHIKEYAN 13 #SK13’ DIRECTED BY RAJESH LAUNCHED WITH A RITUAL POOJA
When an audience walking out of theatres utter, “It was a wholesome entertainer’ and take back home baggage of fun and enjoyment, what else could be a priceless joy for the creators crafted and presented it. Across the span of a decade, producer K.E. Gnanavel Raja of Studio Green, Filmmaker Rajesh and Actor Sivakarthikeyan have offered wholesome entertainers in their respective arenas. Now, it all becomes a triple impact as these powerhouse entertainers will be coming together.
Studio Green’ ‘Production No.9’ tentatively titled as ‘Sivakarthikeyan 13 #SK13’ was launched this morning with a ritual pooja.
Sharing some words on the project, producer K.E. Gnanavel Raja says, “When personalities like Rajesh and Sivakarthikeyan are coming together, one needn’t strain to analyse what genre, the film would belong to. Moreover, for a filmmaker like Rajesh, who is much illustrious for portraying his protagonists in accordance to the expectations of fans and family audiences, I am hopeful and confident that he will definitely cater to their tastes of what they expect from a Sivakarthikeyan film. Of course, Sivakarthikeyan hasn’t been merely an entertainer of masses, but has focalized on the part that his producers, distributors and exhibitors are benefitted well. So it’s so much elating to team up with such positive people and audiences can look forward to an enjoyable family entertainer.”
The official announcement about the cast and crew in this film will be made shortly.
ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா ப்ரொடக்ஷன் நம்பர் 9, சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது!
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்” என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி.
ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது.
இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன். மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர். எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.