0.3 C
New York
Monday, December 2, 2024

Buy now

spot_img

Romantic thriller “Kadamaan Parai”

காதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது     “ கடமான்பாறை “

                                       

மன்சூரலிகான்  தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு  முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.                                                                                                                      

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                     

ஒளிப்பதிவு   –  மகேஷ்.T   

இசை – ரவிவர்மா                                                                                                                                                                     ஆக்கம் , இயக்கம்  –  மன்சூரலிகான்.                                                                                                           

படம் பற்றிகுனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…   

கலூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள்.  அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சமலையை   தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

  

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE