13.4 C
New York
Monday, November 11, 2024

Buy now

spot_img

“Rangoli” 2nd look Launched with College Students


“ரங்கோலி” படத்தின்  செகண்ட் லுக் வெளியீடு !!!

 “ரங்கோலி” படத்தின்  செகண்ட் லுக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியீடு !!
ஃபர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களிடம் பேரெதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ரங்கோலி படத்தின் செக்ண்ட் லுக்  எம் ஜி ஆர் கல்லூரி கல்ச்சுரல் விழாவில் 2000 கல்லூரி மாணர்வகள் மத்தியில், கோலாகலமாக வெளியிடப்பட்டது.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் இரண்டாவது லுக் நேற்று எம் ஜி ஆர் யுனிவர்சிடி & ரிசர்ச் கல்லூரி கல்ச்சுரல் விழாவில் 2000 கல்லூரி மாணவர்கள் மத்தியில் கல்லூரி பிரசிடண்ட் MR. ACS அருண்குமார்  அவர்களால் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.
பள்ளி மாணவர்கள் குதூகலமான கொண்டாட்டத்துடன் அமர்ந்திருக்கும் இந்த செகண்ட் லுக் நம் பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளை கிளறுகிறது. படத்தின் போஸ்டர்கள்  படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ்  இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார். மேலும் இப்படத்தில் பாடல்கள் கார்த்திக் நேத்தா, வேல்முருகன் மற்றும் இளன் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு விரைவில் வெளியாகவுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE