12.9 C
New York
Monday, May 13, 2024

Buy now

Nitham Oru Vaanam

நாயகனாக அசோக் செல்வன். அவருக்கு என்ன மச்சமோ தெரியவில்லை, அவர் நாயகனாகவும் படங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகியரே வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக அவருக்கு மூன்று நாயகியர்.அம்மா அப்பாவுடன் கூட நட்புறவுடன் இல்லாமல், அலுவலக நண்பர்களுடனும்  இயல்பாகப் பேசிப் பழக்கமில்லாமல் இருக்கும் அசோக் செல்வன் வாழ்க்கையில் எதேச்சையாக ரிது வர்மா வருகிறார்.சில உண்மைகளை அறிந்து கொள்ள அசோக் செல்வன் மேற்கொள்ளும் ஒரு பயணத்தில் வழித்துணையாக வரும் ரிது வர்மாவுடனான உறவு என்ன ஆகிறது, அசோக் பயணப்பட்டு சென்ற காரியங்களில் அவரால் எதிர்பார்த்து சென்ற உண்மைகளை அறிய முடிந்ததா..?பாஷை தெரியாத புவனேஸ்வர் ஊரில் கதை தொடங்குகிறது. கொல்கத்தாவுக்கு எந்த பஸ்சில் செல்ல வேண்டும் என்று அசோக் செல்வன் தமிழில் கேட்க அதற்கு அங்குள்ளவர்கள் இந்தியில் பேசி அசோக்கை விரட்ட அவருக்கு ஆபத்பாண்டவன்போல் கிடைக்கிறார் ரிது வர்மா. முதலில் அசரும் கடுப்ன்படிக்க பின்னர் அசோக்கிடம் பேசி காதல் கதையை கேட்க தொடங்கியதும் காட்சிகளில் சுவரஸ்யம் புகுந்துக்கொள்கிறது.அதிலும், அப்பா அழகம்பெருமாள் தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும் ஒவ்வொரு முறையும் அபர்ணா பாலமுரளி அடிக்கும் லூட்டிகள் படத்தில் பொழுது போக்கின் உச்சம். இருவரின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள கொல்கத்தா செல்லும் வழியில் அசோக் செல்வனுடன் இணைந்துகொள்கிறார் ரிது வர்மா.அவர் மட்டுமல்லாது ஷிவாத்மிகா ராஜசேகர் ஏற்றிருக்கும் பாத்திரமும், அதே பாத்திரத்தை இன்னொரு பகுதியில் ஷிவானி ஏற்று நடித்திருப்பதும் நம்மை நெகிழ வைக்கிறது.இவர்கள் அற்புதமாக நடித்திருந்தாலும் எல்லாரையும் தன் நடிப்பில் தூக்கி சாப்பிடுகிறார் அபர்ணா பாலமுரளி. ஒரு குட்டி ஊர்வசி என்று சொல்லும் அளவுக்கு அப்பாவித்தனமான அந்தப் பாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார் அபர்ணா.அர்ஜூன், வீரா, பிரபா என மூன்று பாத்திரங்களில் நடிப்பில் வேறு பாடு காட்டியிருக்கும் அசோக் செல்வன் கதை தேர்விலும் அக்கறை காட்டியிருப்பது கைகொடுத்திருக்கிறது.“எல்லோரும் ஒருநாள் சாகப் போறோம்… அதுவரை வழியில் பார்த்து “ஹாய்…” சொல்லும் ஒரு நபருக்கு பதிலுக்கு “ஹாய்…” என்று சொல்லிவிட்டு போவதில் என்ன தடை இருக்கிறது..?” என்று அவர் எழுதியிருக்கும் வசனம் மனித வாழ்வின் மேன்மையை ஒரு வரியில் சொல்லிவிட்டு போகிறது.ஒரு குறிப்பிட்ட விநாடியில் நமது வாழ்க்கை தலைகீழாக ஆகிப்போகிறதா..?  திரும்பவும் அதனை நேராக்க முடியும், எந்த சூழ் நிலையிலும் வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் தான் என்பதை சிவாந்திகா மற்றும் மதிவதினி அபர்ணா பாலமுரளியை திருமணம் செய்துகொள்ளும் பிரபாகரன் ஜீவா மூலமாகவும் அட்டகாசமாக சொல்லி புரிய வைத்திருக்கிறார் ரா கார்த்திக்.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE