7.9 C
New York
Thursday, November 14, 2024

Buy now

spot_img

Coffee With Kadhal

ஒரு படைப்பாளி இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப அதே சமயம், தன்னுடைய அதே பாணி காமெடி காதல் கலாட்டா திரைக்கதை உக்தியுடன் வெற்றிகரமாக பயணிக்கமுடியுமா..? சுந்தர் சி அதற்கு மிகப்பெரிய உதாரணம். கவாஸ்கரின் சாதனையை சச்சினும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலியும், கோலியின் சாதனையை சூர்யகுமாரும் முறியடிப்பது போல.சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் சிறுவயதில் அடித்துக் கொள்வது போலவே வாலிப வயதிலும் காதலுக்காக அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி தலையிட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பவராக இருக்கிறார்.ஐஸ்வர்யா தத்தாவுடன் நெருக்கம், மற்றும் மாளவிகா சர்மாவுடன் இணக்கம் என்று புகுந்து விளையாடி இருந்தாலும் ஜீவாவுக்கு ஜோடி அமைவதில்தான் சிக்கல் ஏற்படுகிறது.வழக்கமான பொறுப்பில்லாத இளைஞர் வேடம் ஜெய்க்கு. அவரது வழக்கப்படியே காதலுக்காக நிறைய அவமானப்படுகிறார்.இசைக்கலைஞராக ஸ்ரீகாந்த் பொறுப்பில்லாமல் இருந்தாலும் அவரது மகளை வைத்து கிளைமாக்ஸுக்கு லீட் கொடுத்திருப்பது நல்ல விஷயம்.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம்.ஊட்டியின் அழகையும், வீட்டின் அமைப்பையும் சிறப்பாக படம் பிடித்து காட்சிக்கோணங்களில் ரிச் லுக்கை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி.ஒரு குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் திருமணத்தில் ஏற்படும் குழப்பங்களை ராம் காம் பாணியில் கொடுக்க நினைத்த இயக்குனர் அதை இன்னும் சுவாரஸ்யத்தோடு கொடுத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.இடையிடையே பஞ்ச் வசனங்கள் மட்டும் கவனத்தை ஈர்க்கின்றது. இதில் பலவித குணாதியங்களை கொண்ட தொகுப்பாக அவரவர் தங்கள் வாழ்க்கையில் கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவதும், கிடைத்த ஒன்றை வைத்து வாழ நினைக்காமல் தவறவிடுவதும் என்று பல கோணங்களில் கதை தாறுமாறாக சென்று பின்னர் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து சுபமாக முடித்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE