27.8 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

Do not change the title of the film at any cost-Vishal

            யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள்

  நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேச்சு

 

 

நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால்.. இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன் ..

ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்கள் ஏன் பயப்படனும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.

என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப் பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்

இந்த விழாவில் இயக்குனர் விக்ரமன் அஜ்மல் எஸ்.ஏ.சந்திரசேகர் சினேகன் கதிரேசன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.

இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் பேசும் போது...

ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது.

ஜெயிலுக்கு மட்டும் தான் போகல..அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்..

எனக்கு வேற வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும் என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE