23.5 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

Aalambana – Shooting Of This Exciting Film Commenced With a Pooja Today.

ஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் அப்படத்தின் கதையம்சம் பேண்டஸி வகையைச் சார்ந்தது என்பதால்.

பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் பிரம்மாண்டமாக தயாராகிறது.

விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதிநாயர் நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வைபவ் கரியரில் இது மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். நடிகர் பாண்டியராஜன் முரளிசர்மா ஆகியோர் வெயிட் கேரக்டர்களில் நடிக்க, வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.

மிக வித்தியாசமான இந்தக்கதை களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான கோமாளி படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். நெடுநல்வாடை படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ராமசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராட்சசனில் தன் இமலாய உழைப்பைக் கொடுத்த எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.

படத்தில் பங்குபெறும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படம் தாங்கி நிற்கும் கதையம்சம் அனைத்துமே ஈர்க்கக்கூடியளவில் இருக்கும் ஆலம்பனா படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது.

பூஜையில் ஹீரோ வைபவ், நாயகி பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார், முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களின் இயக்குநர் ராம்குமார், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண் பலூன் படத்தின் இயக்குநர் சினிஸ், டோரா படத்தின் இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE