நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படம் “ சவாலே சமாளி “
படம் பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டோம்.... கழுகு படம் எப்படி வேறு ஒரு கதையோட்டமாக கருதப்பட்டதோ... சிவப்பு படம் இன்னொரு கோணத்தை காட்டும். இந்த சவாலே சமாளி படம் முழுக்க முழுக்க காமெடி கலாட்டா தான். முதல் ரீல் முதல் கடைசி ரீல் வரை காமெடி காமெடி காமெடி தான். அதை தவிர வேறு எதுவும் கிடையாது. நோ சென்டிமென்ட் டச்..
யாருமே அறிந்திராத ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் அசோக்செல்வன் மற்றும் ஜெகன் கோஸ்டி..சேனல் வளர்ச்சியடையாத போது ஜாலியாக இருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் சேனலை வளர்ப்பதற்காக சில ஐடியாக்களை செய்கிறார்கள். அதில் சேனல் அமோக வளர்ச்சி அடைகிறது. ஆனால் அது வரை ஜாலியாக இருந்த அவர்களுக்கு பிரச்சனைகள் வருகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பது தான் கதை. ஒரு பொழுதுபோக்குப் படத்திற்கான சகல அந்தஸ்தும் உள்ள படம் சவாலே சமாளி என்றார் இயக்குனர் சத்யசிவா.
no images were found