13.2 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

Sasikumar team up with Nikki Galrani for next movie

சசிகுமார் படத்தில் முதன் முறையாக  ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி  !!

நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில்  ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்த படம் சசிகுமாருக்கு 19 படமாகும். இப்படத்தில் சசிகுமார் IT இல் பணிபுரியும் நபராக வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா என்பவர் தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு  ஜோசப் செய்யகின்றனர்.

(நிர்வாக தயாரிப்பு  N .சிவகுமார் , தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம் ) இப்படத்தின் படப்பிடிப்பு  பொள்ளாச்சியில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE