Think Big Studios
Presents
Director Vijay’s “ Saivam ”
Director Vijay has carved a place for himself in the Tamil film industry. He ventures into versatility when it comes to choosing his scripts. Right from his debut film to his latest film ‘Saivam’ Director Vijay has retained an emotional drive that delivers a feel good entertainer for the whole family.
‘Saivam’ is a movie on absolute family values. It will zoom through every single individual’s family roots and one will understand the real meaning behind family portraits. Nasser sir has given a life time performance and trust me the little angle Sara has gone miles above her earlier performances. Luthfudeen alias Basha is brilliant, and his scintillating presence will be evident on the screens. Music director G.V.Prakash and the Director of photography Nirav shah are always an integral part of my team. During our Post-Production stage we bounce and discuss our ideas which in turn becomes our future projects. This assures an element of quality and enhancement of our product, in its making style. ‘Saivam ‘ will be a cool breeze that infuses the lost traditions this summer. The title does not signify any culture or practice but will be the idea of the film concludes Director Vijay .
இயக்குனர் விஜய் தயாரிப்பில் இயக்கத்தில் ‘ சைவம் ‘ .
இயக்குனர் விஜய் தமிழ் திரை உலகின் இயக்குனர்களில் தனி தன்மை உடையவர் . விஜய் தன்னுடைய படங்களில் தன்னுடைய முந்திய படத்தின் சாயல் இல்லாமல் இயக்குவது தன்னுடைய பிரத்தியேக பாணியாக பின்பற்றுகிறார் . முதல் படமான கிரீடம் முதல் தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘சைவம்’ வரை , தன்னுடைய அடிப்படை பாணியான குடும்ப பிண்ணனியை கையாண்டு வருகிறார்.
‘ சைவம் முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும் . நமது குடும்ப வேர்களை பற்றிய கதை இது ….நமது முன்னோர்களின் படங்கள் நம் வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் கதை ….. நாசர் சார் தன்னுடைய வாழ் நாள் சாதனையாக இந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம் . அந்த குட்டி தேவதை சாரா , தெய்வ திருமகள் படத்தில் இருந்ததை விட பல மடங்கு உயரத்தை நடிப்பால் இந்த படத்தில் தொட்டு இருக்கிறார் . லுதுப் என்கிற பாஷா என்கிற பெயரில் அறிமுகமாகும் நாசர்- கமீலா நாசர் தம்பதியரின் மகன் இந்த படத்தில் ரகளை படுத்தி இருக்கிறார் . அவருடைய உற்சாகம் திரையிலும் தெறிக்கும் என்று நம்புகிறேன் . இசை அமைப்பாளர் ஜி. வீ . பிரகாஷ் மற்றும் ஒளிபதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் என்னுள் இணைந்த , என்னுடைய மன ஓட்டத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன் . ஒரு படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆற்றும் போதே அடுத்த படத்தை பற்றி நாங்கள் விவாதிக்க தொடங்குவோம்.அதுவே நாங்கள் தொடர்ந்து பணியாற்றும் ரகசியம் . ‘ சைவம் ‘ இந்த கோடை காலத்தில் குளிர்ச்சி ஊட்டும் ஒரு இனிய தென்றலாக வலம் வரும் .இந்த தலைப்பு எந்த ஒரு கலாச்சாரத்தை பற்றியதோ , வழக்கத்தை பற்றியதோ அல்ல …. கதையின் மைய கருத்தை பற்றியது ‘ என்று கூறுகிறார் இயக்குனர் விஜய் .
no images were found