22.5 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

Radhamohan joins hands with S.J.Suryah


SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின்  படப்பிடிப்பு இன்று துவங்கியது. 
சமீபத்தில் 'மான்ஸ்டர்'  மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக  நடித்திருந்தார் SJ சூர்யா.இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார்

இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை  ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH  LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான  வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக  இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபமாக  மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான  இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில்,  இன்று நவம்பர் 9ம் தேதி  இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 
இது பற்றி SJ சூர்யா... 
இன்று எனது அடுத்த பயணம்  நண்பர், தொழிலதிபர்  சுனில் ரா கேமரா ஆன் செய்ய இனிதே படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. ராதாமோகன் இயக்கத்தில் , பிரியா பவானி சங்கர் இணைய ,  யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கில் 2020 வரும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம்  எனத் தெரிவித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து  வரும் 2020  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது SJ சூர்யா 'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE