9.9 C
New York
Sunday, May 12, 2024

Buy now

Mukundan Unni Associates

மலையாளத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இவர்கள் ஆக்‌ஷன் கதைகளை நம்புவதை விட யதார்த்தை நம்பி படம் எடுப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை இப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.படத்தின் ஆரம்பத்திலேயே அவருடைய ஆதார் அட்டையில் வருடா வருடம் வயதை குறைத்துக் கொண்டே வருவதில்லையே அவரது பாத்திரத்தில் கிரிமினலான சுயநலம் புரிந்து போய்விடுகிறது.நேரடி வக்கீல் தொழிலில் அவருக்கான வாய்ப்புகள் அடிபடுகிற நிலையில் , விபத்துக் காப்பீடு குறித்த ஒரு விவரம் அவரது கவனத்துக்கு வருகிறது. விபத்தில் சிக்கியவரின் பாதிப்புகளை அதிகம் காட்டி அதற்கேற்ப அரசு எந்திரத்தை வளைத்து, அதன் மூலம் காப்பீடு நிறுவனங்களில் இருந்து அதிக காப்பீடு பெற்று கொஞ்ச பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு கொடுத்து விட்டு பெரும்பகுதியை சுருட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் நபரை ( சூரஜ் வெஞ்சிரமூடு) பார்க்கிறார்.அதே தொழில் இறங்குகிறார் . ஒரு நிலையில் தொழில் போட்டியை நிறுத்தி தனி ஆளாய் சம்பாதிக்க எண்ணி அந்த நபரின் காரில் பாம்பை விட்டு அவரது மரணத்துக்கும் காரணமாகிறார்.படம் முழுக்க வினித் ஸ்ரீனிவாச னின் ஆக்ரமிப்புத்தான் ஆனாலும் போரடிக்காமல் கடைசி வரை கொண்டு செல்வது இயக்குனரின் கைதேர்ந்த யுக்தி.படத்தின் ஆதார சக்தியை அதன் சுவாரசியமான திரைக்கதை தான் தன் முன்னே நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் புரிந்து கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் வினித்தின் நகர்வுகள் நமக்கும் புரிந்து விடுவது சுவாரசியத்தை கூட்டுகிறது.விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு , சிபி மேத்யூ அலெக்ஸ், இசை யாவும் பொருத்தம் .இதுபோன்ற குற்றங்களை தாங்கிச் செல்லும் நாயகன் தோன்றும் படங்களில் கடைசியில் ஒரு நீதியுடன் முடிப்பது வழக்கம். ஆனால் அதையும் இந்த படத்தில் முறியடித்து குற்றங்கள் செய்தவன் மேன்மை பெறுவதாகவே படம் முடிந்து விடுகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE