23.7 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

Moone Moonu Vaarthai movie news

Share screen with the  legendary SPB sir is a bliss says Arjun Chidambaram  

The young vibrant team of ‘Moone Moonu Vaarthai’ is all geared up to release their movie on June 26th. The romantic comedy film has been produced  by SP Charan for Capital Film Works and directed by Madhumitha. With a mix of new comers and expertise in the cast the team is all set to entertain the audience soon.

Debutant Arjun Chidambaram, one of the leads in the film excited about his first film. “ I play a character named Arjun a boy next door character who urges to achieve big and prove himself. It made me so comfortable to get along with the role. I was so nervous to act with SPB sir and Lakshmi Madam. I used to call SPB sir “Thaaths” since he plays my Grandfather in the film. I had actually wanted to perform for a song sung by SPB sir, though he had sung only for a montage song in this film . I wish in my forth coming films at least i can have his song for me. Spending time with this legends is like reading  double encyclopedia. The three words i like to say is 'I am happy' says the erstwhile theatre artist, Arjun.

“ The transformation from a stage performer to acting before camera was bit tough yet It was a beautiful learning experience. Director told me to observe Venky my co-star, who taught me lot on acting and grooming up myself as a screen actor.” Says Arjun.

“As a debutant I would like to thank my director and producer for all the trust and tolerance they had towards me.” Adds the young actor.

மூணே மூணு வார்த்தை - அர்ஜுன்

Capital Film Works SP சரண் தயாரிப்பில் , இயக்குனர் மதுமிதா இயக்கியுள்ள ‘மூணே மூணு வார்த்தை’ திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி வெளிவரவுள்ளது. நகைசுவை கலந்த காதல் படமாக தயாராகியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள், அனுபவசாலிகள் எனத் தங்கள் நடிப்பால் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வருகிறார்கள்   ‘மூணே மூணு வார்த்தை’ குழுவினர்.

மேடை நாடக கலைஞரான அர்ஜுன் சிதம்பரம் இப்பாடத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார், தனது கதாப்பாத்திரத்தைப் பற்றி கூறுகையில் “ நமது அக்கம் பக்கம் வீடுகளில் நிதமும் பார்க்கும்  எதாவது சாதித்திட வேண்டும் என்று நினைக்கும் அர்ஜுன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நிஜத்திலும் ஒத்துபோகும் கதாப்பாத்திரம் என்பதால் எளிதில் பொருந்தி நடிப்பதற்கு இலகுவாய் இருந்தது. SPB சார் மற்றும் லக்ஷ்மி மேடம் ஆகியோருடன் முதல் நாள் நடிப்பதற்கு மிகவும் படபடப்பாய் இருந்தது. படத்தில் SPB சார் எனக்கு தாத்தாவாக வருகிறார் அவரை ‘தாத்ஸ்’ என்று செல்லமாக அழைப்பேன். இப்பொழுது அதுவே பழக்கமாகிவிட்டது.

" SPB சார் பாடலுக்கு நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது, எனினும் இப்படத்தில் ஒரே ஒரு மாண்டேஜ் பாடல்தான் பாடியுள்ளார். எனது அடுத்த படங்களில் இக்கனவு நிறைவேறும் என நம்புகிறேன். SPB சார், லக்ஷ்மி மேடம் இருவருடனும் பழகுவது முழு என்சைக்கிலோப்பீடியா படிப்பது போல் இருந்தது. ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து நடிப்பார்கள் இடை இடையே நான் நடிக்கவும் விட்டுக் கொடுப்பார்கள். இப்பொழுது எனக்கு தெரிந்த 'மூணே மூணு வார்த்தை' சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம்“ என சிரிப்புடன் கூறினார் அர்ஜுன்.

“ மேடை நடிப்பிலிருந்து கேமிரா முன் நடிப்பதற்கும் இருக்கும் நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கு சிறிது நேரம் எடுத்தது.  எனினும் திரைப்பட நடிப்பிற்கு தேவையான விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் வெங்கி. “

“ என்மேல் நம்பிக்கை வைத்து , என் தவறுகளை பொறுத்துக் கொண்டு என்னை கதாநாயகனாக அறிமுகப் படுத்தியிருக்கும் எனது இயக்குனர் மதுமிதா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ” என்றுக் கூறினார் இளம் கதாநாயகன் அர்ஜுன்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE