27.4 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

#KabadiVeeran Movie Audio launch

"கபடி வீரன்" பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு!

ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் "அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்" பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் "கபடி வீரன்". இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை , சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது, ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர் தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர் ,அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ் , ராதாரவி, ஜாகுவார் தங்கம் , நமீதா , 'பவர் ஸ்டார்' சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் ... உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திரைக்கதை மன்னன் இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் , நான் இப்பொழுது ஒரு பெரிய அதிர்ச்சியில் இருக்கிறேன். இங்கு வந்த போது அதிர்ச்சி இல்லை. மேடையில் கூப்பிடுவதற்கு முன் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியில்லை , நமீதா வந்தபோது கூட அதிர்ச்சி இல்லை. மேலே வந்தபோதுக் கூட அதிர்ச்சி இல்லை , ஆனால் என் அருகே நமீதாவின் மச்சான்ஸ் அதாங்க , நமீதாவின் வீட்டுக்காரர் வீரா , மேடையில் என் அருகில் அமர்ந்த போது, பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டேன். காரணம், என்னவென்று யாருக்காவது தெரியுமா? வேறொன்றுமில்லை, நமீதாவின் மச்சான்ஸ் வீரா., என்னிடம் இந்த மேடையில் அருகில் அமர்ந்து பேசும் போது , மலைக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கிறேன் . அடுத்த மாசம் தான் கோயிலுக்கு போறேன் என்ற போது எனக்குஅதிர்ச்சி ஆகிவிட்டது .எப்படி ? இப்படி ? கஷ்டமில்லே ..? முடியாதே , ரொம்ப கஷ்டமாச்சே! இப்படி ,ஒரு அழகிய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு நாள் கணக்கில் விரதமிருப்பது ரொம்ப கஷ்டமாச்சே ... முடியாதே ....என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த யோசனையே ,பெரிய அதிர்ச்சி ஆகிவிட்டது. அதனால இங்கு , வந்ததிலிருந்து வீராவை ஆச்சர்யமாக பார்த்து வருகிறேன்... அந்த அதிர்ச்சி ஆச்சர்யத்தில் இருந்து மெல்லத் தான் மீள முடியும் .எனவே வீராவிற்கு முதல்ல என் வணக்கத்தை தெரிவிச்சுக்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு ., இதே சீக்குவன்ஸ் என் ஒரு படத்துலக் கூட இருக்கும். நமீதா மாதிரி ஒரு பெண்மணி அந்தப் படத்துல சும்மா தேரு மாதிரி வருவாங்க வயசான ரெண்டு டிக்கெட்டுங்க அந்தம்மா கிராஸ் ஆகற வரைக்கும் அப்படியே பார்த்துட்டு இருப்பாங்க, அப்புறம் , அவங்க குள்ளாற ., எப்படிய்யா ? இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி , விட்டுட்டுட்டு அவன் துபாய்ல போய் கிடக்குறான் ? எப்படிய்யா அவனால முடியுது ? நம்மளை எல்லாம் பக்கத்து ஊருல வேலைக்காக கொண்டு போய்விட்டாக் கூட மதியம் சாப்பாட்டிற்கோ ., இல்லை இராத்திரி சாப்பாட்டிற்கோ வீட்டிற்கு வந்துடுவோம் ... அவன் எப்படி வருஷ கணக்கில துபாய்ல போய் கிடக்குறான் ? என தங்களுக்குள் ஆராய்ச்சியாக பேசிப் பாங்க ... அது அந்தப் படத்து சீனுக்காக வச்சேன். இங்க இவரு மாலை போட்டு வந்து உட்கார்ந்து இருக்கிறதை பார்த்ததும் எனக்கு அந்த சீன் ஞாபகம் மைன்டுக்கு வந்துடுச்சி .

படத்தோட தயாரிப்பாளர் ஏலகிரி அம்மாவுக்கும் , படத்துல , இது அதுன்னு இல்லாம எல்லா பொறுப்புகளையும் எடுத்து தன் தோளில் போட்டுட்டு இருக்கிற நாயகர் அரசு ,அதிரடி அரசு., அவர் கூட ஒர்க் பண்ணிய எல்லோருக்கும் என் வணக்கம் ,வாழ்த்துகள். அப்புறம் இந்தப் படத்தோட பைட் மாஸ்டரையும் பாராட்டணும். இங்க போட்டு காட்டின சீன்களை வச்சி பார்க்கிறப்போ ., படம் முழுக்க ஒரே ஆக்ஷனா தான் மெயினா இருந்தது.... நடிகர்அதிரடி அரசு அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதே மாதிரி டான்ஸ் மாஸ்டரையும் பாராட்டி சொல்லணும்.அவரு ஒரு வேலை பண்ணி யிருந்தார் .என்னன்னா ., எனக்கு வாரிசா ஆகிட்டாரு ... எப்படின்னா ? பொதுவா நான் டான்ஸ் ஆடினா ., எக்சர்சைஸ் மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க ... அவரு எக்சசைஸையே டான்ஸ் ஆக்கிட்டாரு ... ரொம்பவே கிரியேட்டீ விட்டியா ., ஹீரோ கை காலை அப்படி இப்படி அசைக்க சொல்லி ., அதற்கு ஏற்ற மாதிரி பீஜியத்தையும் , மியூசிக்கையும் சிங்க் பண்ணி பாட்டு காட்சிகளை அழகா அமைச்சிருக்கிறார் பாராட்டுகள். ஆனா ., பாட்டு எழுதியிருக்கிற இந்தப் படத்தின் எல்லாமுமான அதிரடி அரசு பாட்டு எழுதும் போது கொஞ்சம் யோசிச்சு எழுதனுங்க .., என்னன்னா , காயத்ரி பாடும் போது "நான் பார்த்த ஆண்களிலேயே நீ வித்தியாசமானவன் ... " அப்படின்னு இருந்துச்சு. பொம்பளைபாடும் போது அப்படி எழுதக் கூடாது அது கேட்டதும் எனக்கு 'கருக்'குன்னு இருந்துச்சு.
"ஆண்களில் நீ வித்தியாசமானவன்னு இருக்கலாம் .. ". அதுவரைக்கும் ஓ.கே . ஹீரோயின் பேரு டேமேஜ் ஆகுற மாதிரி எழுதக் கூடாது புதுசா பாட்டு எழுத வந்திருக்கீங்க ... இனி பார்த்து எழுதுங்க . என்றவாறு பேசினார்.

அவருக்கு முன்னதாக பேசிய நடிகர் டத்தோ ராதாரவி ., நான் நிறைய அட்வைஸ் பண்ணுவேன். ஆனா ,யாரும் கேட்கறதில்லே .இங்க வந்து இருக்கிற பவர் ஸ்டார் சீனிவாசன் ., ஹீரோவா நடிக்கப்போறேன், படம் தயாரிக்கப் போறேன்னப்போ வேண்டாம், காமெடியனா நடிங்க நல்லா இருக்கும்னு எவ்ளவோ சொன்னேன் கேட்கலை ... எப்பவுமே நல்லது சொன்னா கேட்க மாட்டாங்க .அதுல சீனிவாசன் ஒரு முக்கியமான ஆளு தேவை இல்லாத பிரச்சினையில எல்லாம் சிக்கி மீண்டு வந்து இப்போ காமெடியனா வலம் வந்துட்டு இருக்கார். காமெடி நடிகரா வளர்ந்துட்டு இருக்கார். இதைத் தான் நான் அப்பவே சொன்னேன் அவரு கேட்கலை. அதனால சில இடங்கள்ல என்னன பார்க்கம கூட போயிடுவார். ஆனா நான் விடமாட்டேன். நமக்கு எல்லாமே பேஸ் டூ பேஸ் தான். சீனிவாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இதை பேசுறேன். அவரு ரொம்ப நல்ல மனசு உடையவர். அவரு ஏமாத்திட்டாருன்னு பல பேரு புகார் சொல்றாங்க .ஏன் ஏமாந்திங்கன்னு யாராவது திருப்பி கேட்கறீங்களா ? அதே மாதிரி ,நம் சினிமா குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது என்றாலும் நான் தான் முதல் ஆளாக நிற்பேன். நடிகர் விஷாலிடம் கூட போனில் ஏதாவது முக்கிய பிரச்சினை என்றால் அவ்வப்போது பேசுகிறேன். சிலர் தூண்டி விட்டு ஓடி விடுவார்கள் நான் அப்படி கிடையாது. ஓடி ஒளிவது எனக்குப்பிடிக்காது.

பாருங்க ., சீனிவாசனை பத்திப்பேசினா இவ்ளோ பெரிய டாபிக்ல வந்து நிக்குது.

அது போகட்டும் இந்தப் படத்தின் தயாரிப்புக்கு உறுதுணையா இருந்து , இந்தப்படம் சிறப்பா வர காரணமாயிருந்து இங்க,ஏலகிரி சக்தி அம்மா வந்திருக்காங்க .அந்த அம்மாவை வணங்குங்க ., எல்லா அம்மாவையும் வணங்குங்க .குறிப்பா உங்க அப்பா அம்மாவை வணங்க மறந்துடாதீங்க ... அவங்களை கைவிட்டுடாமல் கடைசி வரை கூட வச்சுக்குங்க ., நடிகர் திலகம் வீட்டு பெயர் , அன்னை இல்லம். நடிகவேள் ,கலைஞர், ,புரட்சித் தலைவர் , புரட்சித் தலைவி ... அவ்வளவு ஏன் வீடு வரை எல்லோரது வீடுகளுக்கும் எங்களது அம்மாக்களின் பெயரை தான் வைத்திருக்கிறோம் என்றால் பாருங்கள். எனவே நீங்களும் உங்களது பெற்றோரை கைவிட்டு விடக் கூடாது எனக் கேட்டு கொள்கிறேன். என பேசி அமர்ந்தார்.

இவ்விழாவில் ,ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர்தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர், இப்பட இயக்குனர் -நாயகர் அதிரடி அரசு , அறிமுக நாயகி காயத்ரி ..ஜாகுவார் தங்கம் , நமீதா , வீரா , 'பவர் ஸ்டார்' சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் ... உள்ளிட்டோரும் பேசினர்.

முன்னதாக ,டத்தோ ராதாரவி " கபடி வீரன்" படத்தின் பாடல்கள் ஆடியோவை வெளியிட திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை தொகுப்பாளர் அர்ச்சனா அழகான தமிழில் தொகுத்து வழங்க ., பி.ஆர்.ஓ ப்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE