14.6 C
New York
Saturday, April 27, 2024

Buy now

I Dubbed in my voice for Tamil Ratchan -Nagarjuna

நான் நடித்த உதயம், கீதாஞ்சலி படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது போல் ‘இரட்சன்’ படத்திற்கும் கிடைக்கும் – நடிகர் நாகர்ஜுனா

இரட்சன் – தி கோஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் குழுவினர்கள் பேசியதாவது:

எழுத்தாளர் அசோக் பேசும்போது,

இப்படத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தது நான் தான். முதலில் இந்த வாய்ப்பு கிடைத்ததும் பயம் இருந்தது. ஆனால், போனப் பிறகு சந்தோஷமாக இருந்தது. அதே மாதிரி தான் படமும் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். கமர்ஷியலாக மாஸாக, எந்தளவிற்கு சிறந்த பொழுதுபோக்கான படமாக கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும். தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நாகார்ஜுனா சாருக்கு நன்றி என்றார்.

பாடலாசிரியர் முரளிதரன் பேசும்போது,

இது என்னுடைய முதல் முயற்சி. தெலுங்கில் பாடல் நன்றாக எழுதியிருந்தார்கள். அதேபோல், தமிழிலும் சிறப்பாக வர வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் முகேஷ் பேசும்போது,

இந்த படத்தில் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. பெரிய நடிகர்களுடன் பணியாற்றுவது வரம் 2வது கொரானாவிற்கு முன்னரே ஆரம்பித்து பெரிய சவால்களை சந்தித்து இன்று திரையரங்கிற்கு எடுத்து வந்திருக்கிறோம். சிறுவயதில் நானும் சென்னைவாசி தான். தமிழில் நாகார்ஜுனா சாருக்கு ரசிகர்கள் அதிகம். இந்த இரண்டு வருடங்களில் என்னுடைய குடும்பம், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் முதல் என்னிடம் நாகார்ஜுனா சாரைப் பற்றி கேட்டது தான் அதிகம். அவருடைய அன்பை நான் நன்கு அறிந்துகொண்டேன். சிறுவயதில் இருந்தே நான் பார்த்து ரசித்த கதாநாயகன். இன்று அவரை ஒளிப்பதிவு செய்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இயக்குநர் பிரவீனுடன் எனக்கு 4காவது படம் இதற்கு முன் 3 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆகையால், எங்களுக்குள் புரிதல்கள் அதிகம் இருக்கும். இப்படத்திற்கு பிறகும் அவருடன் இன்னொரு படத்தில் பணியாற்ற போகிறேன். டீஸர் வெளியானதில் இருந்து இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. டீஸர் மற்றும் டிரைய்லரில் பார்த்ததைவிட படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். நாயகி சோனல் சௌகான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். நாகார்ஜுனா சாருக்கு சமமாக சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். அதுவும் டூப் இல்லாமல் செய்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். படம் பார்க்கும்போது நீங்களும் ரசிப்பீர்கள். சரத் சார் பிற மாநிலத்திற்கு ஈடாக வெளியீட்டு வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

நடிகை சோனல் சௌகான் பேசும்போது,

இந்த அருமையான வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழில் இப்படம் வருகிறது. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த கதாபாத்திரம் சவாலாகவும், திருப்தியாகவும் இருந்தது. தமிழ் சினிமா எப்போதும் தரமான படங்களை கொடுக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் – 1 மிகவும் நன்றாக இருந்தது.

நாகார்ஜுனா சார் என்னை ஊக்கப்படுத்தவில்லையென்றால் இந்தளவிற்கு என்னால் நன்றாக நடித்திருக்க முடியாது. சரத் சார், ராம்மோகன் ராவ் சார், இயக்குநர் பிரவீன் சாருக்கு நன்றி. என்னைப் பாராட்டிய முகேஷ் சார் வார்த்தைகளுக்கு நன்றி. என்றார்.

தயாரிப்பாளர் சரத் பேசும்போது,

இப்படத்தை பிரவீன் நன்றாக எடுத்திருக்கிறார். நாகார்ஜுனா சார் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். தினேஷ் சுப்பராயன் மற்றும் கிச்சாவும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். பரத் சௌரப் மற்றும் மார்க்கே ராபின் இசையமைப்பாளர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு தமிழ் பையன் முகேஷ் காட்சிகளை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

சுனில், சரத், புஷ்கூர் ராம் ஆகியோருக்கு நன்றி. தமிழில் விநியோகிக்கும் டிரீம் வாரியர் பிரபுவிற்கு நன்றி.

சோனி மியூசிக் இப்படத்தின் ஆல்பத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என்றார்.

இயக்குநர் பிரவீன் பேசும்போது,

இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான படம். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் உணர்வுபூர்வமானவர்கள். நான் சேலையூர், தாம்பரம் கல்லூரியில் தான் பொறியியல் படித்தேன். அப்போதே தமிழ் மக்களிடம் இருக்கும் உணர்வுகளும், அன்பும் மிகவும் பிடிக்கும்.

இந்த படத்திற்காக நாகார்ஜுனா சாரை சந்திக்கும் போது அவரை திரையில் இப்படித்தான் காண வேண்டும் என்று நினைத்திருந்தேன். நாகார்ஜுனா சார் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார். தயாரிப்பாளர் சரத் சார் எங்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தார். சோனல் சௌகான் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

2ஆவது மற்றும் 3ஆவது கொரோனா காலகட்டத்தில் சரத் சார் உறுதுணையாக இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை துபாய், ஊட்டி போன்ற இடங்களில் எடுத்தோம். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி என்றார்.

நடிகர் நாகார்ஜுனா பேசும்போது,

நானும் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, சொந்த ஊருக்கு திரும்ப வரும் சந்தோஷம் கிடைக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரியில் தான் படித்தேன். சென்னையில் எல்லா இடங்களும் எனக்கு பரிச்சயம் தான்.

மணிரத்னம் சாரை மணி என்று தான் அழைப்பேன். பொன்னியின் செல்வன் – 1 படத்திற்காக மணிக்கு வாழ்த்துகள்.

பொன்னியின் செல்வன் மிக பெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தில் நடித்த விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என் தம்பி கார்த்திக்கு வாழ்த்துக்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

நான் தமிழில் ரட்சகன் படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி படத்தின் மூலம் பிரபலமடைந்தேன்.

அவருடன் கீதாஞ்சலி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை மறக்க முடியாது. பொன்னியின் செல்வன் – 1 படத்தில் ஐஸ்வர்யா, கார்த்தி, விக்ரம் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

உதயம் படத்தில் மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பிறகு, ரட்சகன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான தோழா படமும் வெற்றியடைந்தது. தோழா படத்தில் கார்த்தியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அப்படத்தை மக்கள் கொண்டாடினார்கள். விமர்சனங்களும் நன்றாக கொடுத்திருந்தார்கள். அதேபோல் பயணம் படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

முதலில் இரட்சன் படத்தை தமிழில் வெளியிட யோசனை இல்லை. பிற மொழிகளில் வெளியிட வேண்டும் என்று யோசித்தபோது, தமிழில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு தமிழில் மொழிபெயர்த்து கொடுத்த அசோக் அவருக்கு நன்றி. தமிழில் நான் தான் டப்பிங் பேசி இருக்கிறேன். தமிழ் உச்சரிப்பிற்கு உதவிகரமாக இருந்தார். இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகிறது. கொரோனாவிற்குப் பிறகு சமீபகாலமாகத்தான் மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள்.

மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும் இயக்குநர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் இயக்குநர் பிரவீன். இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனத்தை பிரவீனும், சண்டைக் காட்சிகளை தினேஷும் சொல்லிக் கொடுத்தார்கள். ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்புகள் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.

சாமுராய் கத்தி வைத்து சண்டையிடும் காட்சிகள் உள்ளது. அதற்காக பயிற்சிகள் மேற்கொண்டோம். இப்படத்தில் நடனக்காட்சியை சண்டை கலந்த ஒரு நடனமாக அமைத்துள்ளோம். நிச்சயம் அது புதுமையான ஒரு அனுபவத்தை தரும் என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE