27.8 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

I am proud to produce “Ottrai panaimaram” movie

ஒற்றைப் பனை மரம் படத்தை தயாரித்ததில் மிகவும்மகிழ்ச்சி -   எஸ்.தணிகைவேல்

                                          ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல்தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’!

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்குவந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.

இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார்.

 தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.               

'போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும்மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.

யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள்உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும்அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது, ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தைதயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்தமகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்' என்றார்.

இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசைஅமைத்திருக்கிறார். அவரது இசை தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திப்பதுபடத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைகிறது.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற மண் பட இயக்குனர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருதுபெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்தஅபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன்,

பெருமாள் காசி , மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE