Y NOT ஸ்டுடியோஸ்
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில்
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும்
"கேம் ஓவர்"
இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றி படங்களுக்கு பிறகு, தயாரிப்பு நிறுவனம் Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து "கேம் ஓவர்" எனும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
நயன்தாரா நடிப்பில் உருவான "மாயா" (2015) வெற்றி படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
தாப்ஸி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
"கேம் ஓவர்" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. மேலும் தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்கம் - அஸ்வின் சரவணன்
தயாரிப்பு - S.சசிகாந்த்
இணை தயாரிப்பு - சக்ரவர்த்தி ராமசந்திரா
எழுத்து - அஸ்வின் சரவணன், காவ்யா ராம்குமார்
ஒளிப்பதிவு - A.வசந்த்
இசை - ரான் ஈதன் யோஹன்
Y NOT Studios Team