no images were found
UTV again joins hands with Director N. Lingusamy’s
Thirrupathi Brothers to co-produce ANJAAN starring South Superstar Suriya
Chennai, 14 January 2014: UTV Motion Pictures today announced their association with Director N. Lingusamy’s Thirrupathi Brothers to co-produce their next mega budget film starring South Superstar Suriya titled Anjaan (Fearless) along with a great ensemble cast which includes Vidyut Jamwal, Samantha, Manoj Bajpai, Dalip Tahil, Brahmanandam with other leading artistes.
“We are extremely delighted to continue our strong relationship with N. Lingusamy’s Thirrupathi Brothers after our two successful films -Vettai and Ivan Veramaathiri. We look forward to working with South Superstar Suriya and are confident that the movie will be a huge mass entertainer and certainly one to look out for in 2014”, said G. Dhananjayan, Chief – South Business, Studios, Disney UTV.
“We share a great relationship with UTV and our co-productions with them through our banner Thirrupathi Brothers, in the past have been highly successful. We value their support & understanding and happy to co-produce our next film Suriya’s Anjaan with them. The studio brings in great professional support, marketing talent and distribution strength with which they back every movie. The film is being produced on a mega budget in never seen before locations with huge sets and an ensemble of top artistes. The film is going to be a total mass entertainer with a new theme and I am confident it will greatly appeal to the audience when it releases in August 2014,” said writer-director N. Lingusamy.
The film will have cinematography from ace cameraman Santosh Sivan, music by Yuvan Shankar Raja, editing by Anthony, Art Direction by Rajeevan and is written & directed by N. Lingusamy (of super hit films Anandam, Run, Sandakozhi, Bheema, Paiyyaand Vettai).
The film produced by UTV Motion Pictures along with N. Lingusamy’s Thirrupathi Brothers recently completed its first schedule of 35 days of shooting in Mumbai and the second schedule is commencing in January end in Goa post which it will move to various locations across Maharashtra. The entire film will be shot in locations outside of Tamil Nadu. It will be a start to finish film for Suriya, who is totally focusing on this project with a smart new look.
The film is slated to release in Tamil and Telugu languages in August 2014.
லிங்குசாமி இயக்கும் சூர்யாவின் அடுத்த படம் ‘அஞ்சான்’ யூடிவி அறிவிப்பு
சூர்யாவின் அடுத்த புதிய மெகா பட்ஜெட் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. அத்துடன் தயாரிப்பில் கை கோர்த்து யூடிவி மீண்டும் இணைந்து பயணிக்கிறது. ‘வேட்டை’ ‘இவன் வேற மாதிரி’ படங்களை வழங்கிய இக் கூட்டணி 3 வது முறையாக இணைந்துள்ளது.
இதுவரை ரசிகர்களின் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருந்த கேள்வி சூர்யாவின் அடுத்த படத்தின் பெயர் என்ன ?என்பதுதான்.
இதோ அறிவித்து விட்டார்கள். சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘அஞ்சான்’ அதாவது அஞ்சாதவன்,
அச்சம் இல்லாதவன் என்பது இதன் பொருள்
புதிய தோற்றத்தில் புதிய மிடுக்குடன் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சூர்யா நாயகனாக நடிக்கிறார். வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள்.
என் .லிங்குசாமி எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு கேமரா மேதை சந்தோஷ் சிவன். இசை யுவன் சங்கர்ராஜா. கலை இயக்கம் ராஜீவன். எடிட்டிங் ஆண்டனி.
‘அஞ்சான்’ படம் பற்றி டிஸ்னி -யூடிவியின் தென் பிராந்திய வணிகம் மற்றும் ஸ்டுடியோஸின் முதன்மை அதிகாரி ஜி.தனஞ்ஜெயன் கூறும் போது
“மூன்றாவது முறையாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. எங்களுக்குள் அழுத்தமான நட்புறவும் ஆழமான புரிதலும் இருக்கின்றன. அவை மேலும் தொடரும். ஏற்கெனவே நாங்கள் இணைந்த ‘வேட்டை’ ‘இவன்’ வேற மாதிரி’ இரண்டுமே வசூலில் வெற்றி பெற்றவை. அடுத்த மெகா பட்ஜெட் படமாக ‘அஞ்சான்’ இருக்கும். அதை நோக்கி பயணப் படுகிறோம். எங்கள் வெற்றி வரிசையின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும். ” என்கிறார்.
ஆனந்தம்’ ‘ரன்’ ‘சண்டக் கோழி’ ‘பீமா’ ‘பையா”,வேட்டை’ ‘ ஹிட் படங்களின் இயக்குநர் என். லிங்குசாமி பேசும் போது,
“நாங்களும் நல்ல செய்தியை இன்று பொங்கலன்று பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமான நாங்கள் இணை தயாரிப்பாளர்களாக இருக்கும் யூடிவியுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறோம். முந்தைய எங்கள் படங்கள் எல்லாமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. நாங்கள் அவர்களின் ஆதரவையும் புரிதலையும் மதிக்கிறோம். அடுத்த படமான ‘அஞ்சானு’டன் இணைத்துக் கொள்வதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். தொழில் ரீதியாக அவர்கள் அனுபவம் மிக்கவர்கள்.வியாபார திறமையும் விநியோக பலமும் கொண்டவர்கள் அது எங்களுக்கு பெரிய,பலமான பின்னணி சக்தியாக விளங்கும்.
இந்தப்படம் பட்ஜெட்டாலும் நட்சத்திரங்களாலும் படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த்திரை இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப்பெரிய மாஸ் எண்டர் டெய்னராக இருக்கும் ஆகஸ்ட் 2014 ல் வெளியாகும் இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.”என்று லிங்குசாமி நம்பிக்கையுடன் கூறுகிறார்.
மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த ‘அஞ்சான்’ படப்பிடிப்பு அண்மையில்தான் முடி வடைந்தது.
அடுத்தகட்டம் ஜனவரி இறுதியில் புறப்பட உள்ளது படக்குழு. கோவா பயணப்பட்டு மகாராஷ்டிரா செல்கிறது. தமிழ்த்திரை காணாத பல புதிய இடங்களுக்கு செல்லவுள்ளது..
முழுப்படமும் தமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ‘அஞ்சான்’ஒரே நேரத்தில் உருவாகிறது.