-1.5 C
New York
Saturday, December 14, 2024

Buy now

spot_img

“Anantham” A famil sentiment web series by Director Priya in Zee5 Tamil

அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !

தமிழ் இணைய ஓடிடி உலகில் ஜீ5 தளம், தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இத்தளத்தின் அடுத்த படைப்பாக ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

“கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்.”
இந்த தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இயக்குநர் பிரியா V பேசியதாவது….
வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள். பிரகாஷ் ராஜ் சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு; எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இளையராஜா சாருக்கு நன்றி அவருக்கு அவரது இசைக்கு ஒரு தொடரை அர்ப்பணித்துள்ளோம். இந்த ஒரிஜினல் சீரீஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

ஜீ5 சார்பாக கௌசிக் நரசிம்மன் பேசியதாவது…
மீடியா நண்பர்களுக்கு வணக்கம், வழக்கமாக மாதாமாதம் புது புது தொடர்களுடன் உங்களைச் சந்தித்து வருகிறோம். இது உண்மையிலேயே புதுமையான ZEE5 ஒரிஜினல் சீரீஸ். நிஜமாகவே தொடரை பார்க்கும் போது அதை உணர்வீர்கள். ஒரு வீடு பல ஞாபகங்களை புதைத்து வைத்திருக்கும், அந்த வீட்டின் மேல் பயணமாகும் கதை. கேட்கும் போதே மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு வருடமாக உழைத்து உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். நன்றி.

ஜீ5 சார்பில் சிஜு பிரபாகரன் பேசியதாவது…
முதலில் இதை ஆரம்பிக்கும் போது ஆந்தாலஜி செய்ய வேண்டாமென முடிவெடுத்திருந்தோம், ஆனால் இது ஒரு ஆந்தாலஜி, ஒரு வீட்டின் மீது நிகழும் கதை. பிரியா சொன்ன கதை மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. இத்தொடரில் நடித்த அனைவருமே அட்டகாச நடிப்பை தந்துள்ளார்கள். இந்த ஒரிஜினல் சீரீஸ் எட்டு அத்தியாயங்கள் கொண்டது. தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்குமென நம்புகிறோம். நன்றி.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் பேசியதாவது…
எப்போதும் டீம் ஒர்க் வெற்றி பெறும் என்பார்கள், அது இந்த தொடரில் நிரூபணமாகியுள்ளது. இது மேலும் வெற்றி பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது. பிரியா முதன் முதலில் சொன்னபோதே எங்களுக்கு கதை பிடித்திருந்தது. சொன்னவுடனே கௌசிக்கும் ஆரம்பிக்க சொல்லிவிட்டார். ஜீ5 இத்தொடரில் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார்கள். 1964 – 2015 ஒரு வீட்டில் நடக்கும் கதை. ஒரு வீட்டில் நடப்பதால் பல இடங்களுக்கு அலைந்தோம், கடைசியில் ஆச்சி ஹவுஸில் சிறு சிறு வேலைகளை செய்து இத்தொடரை எடுத்தோம். இத்தொடரில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக முக்கியம். சூர்யா மிகச் சிறப்பாக செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் பகத் மிகப்பெரிய பலமாக இருந்தார். மொத்த குழுவும் மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். எட்டு அத்தியாயங்களில் நீங்கள் ஏற்கனவே கேட்ட பாரதியார் பாடல்களை புதுமையான இசையில் தந்துள்ளோம். நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குனர் பிரியா மீது நம்பிக்கை வைத்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். 80 நடிகர்களுக்கு மேல் நடித்துள்ளார்கள். அவர்களின் உழைப்புக்கு நன்றி. இந்த ஒரிஜினல் சீரீஸ் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். நன்றி.

ஒளிப்பதிவாளர் பகத் பேசியதாவது….
இது எனது முதல் ஒரிஜினல் சீரீஸ். முரளி சார் பிரியா மேடம் இருவருக்கும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஒரு கதைக்குள் நிறைய பயணிக்க ஒரிஜினல் சீரீஸ் மிக வசதியாக இருக்கிறது, ஒரு பெரிய முழு நீள திரைப்படத்தை போல் பிரியா மேடம் அழகாக செய்துள்ளார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். தமிழில் மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ள ஜீ5 இந்த தொடரை வெளியிடுவது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் A.S. ராம் பேசியதாவது…
முரளி ராமன் சார் பிரியா மேடம் இருவரால் தான் இங்கு இருக்கிறேன், இருவருக்கும் நன்றி. ஜீ5 லிருந்து தந்த ஊக்குவிப்பு மிக பெரிய உற்சாகத்தை தந்தது. இந்த தொடரில் பணியாற்றியது கரும்பு தின்ன கூலி கொடுத்தது போல தான். என் டீமிற்கு நன்றி. தொடரைப் பார்த்து உங்கள் பார்வையை சொல்லுங்கள் நன்றி.

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது..
இருள் என்பது குறைந்த ஒளி என்றான் பாரதி. அனந்தம் இருந்தால் அங்கு ஒரு நம்பிக்கையும் இருக்கும். அதை தான் இந்த அனந்தம் வீடும் சொல்கிறது. அனந்தம் உங்கள் எல்லோருக்கும் பிடித்தமான பயணமாக இருக்கும். நன்றி.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் தயாரிக்க, அனந்தம் ஒரிஜினல் சீரீஸில் இயக்குனர் பிரியா V பல பணிகளை செய்துள்ளார். திரைக்கதை, எழுத்து மற்றும் வசனங்களுடன், எட்டு எபிசோடுகள் முழுவதும் ஒரு தடையற்ற கதையைச் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குநர் பிரியா V.

திரைக்கதை – பிரியா V, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் & ரீமா ரவிச்சந்தர் | எழுத்தாளர் – பிரியா V | வசனங்கள் – ப்ரியா V & ராகவ் மிர்தாத் | ஒளிப்பதிவு – பகத் | தயாரிப்பு வடிவமைப்பாளர் – சூர்யா ராஜீவன் | இசை – A.S. ராம் | எடிட்டர் – சதீஷ் சூர்யா

ஒரிஜினல் தொடர்கள் எனும்போது, ஓடிடி பார்வையாளர்களின் முக்கிய தேர்வாக ஜீ5 விளங்குகிறது. ‘விலங்கு’ முதல் ‘முதல் நீ முடிவும் நீ’ வரை இதில் வெளியான கதைகள் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ஜீ5 இல் வெளியான ஒரு வாரத்திற்குள் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டி உலகளாவிய பிளாக்பஸ்டர் சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழ் / தெலுங்கு / கன்னடம் / இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. 12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ தியேட்டர் நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், என ஜீ5 ஆனது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ5 ஆண்டு சந்தா ரூ. சிறப்பு விலையில் கிடைக்கிறது. 599/- மட்டுமே!

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE