இந்த்யாவின் முதல் பெண் ஒல்ப்பதிவாளர் என்ற பெருமை கொண்டவர் தான் B.R,விஜயலட்சுமி அவர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் அபியும் அணுவும் ஒரு பெண் இயக்குனர் படம் என்றால் அது எதை சுமந்து வந்து இருக்கும் என்று நாம் அறிந்த விஷயம் அனால் இவர் சற்று கொஞ்சம் வித்தியாசமான கதையம்சத்தோடு களம் இறங்கியுள்ளார் என்று சொன்னால் மிகையாகது
கதை களம் முதல் பாதி மிகவும் செம ஜாலியாக காதல் கட்டிபிடி முத்தம் என்று போகிறது அனால் இடைவேளையில் இவர் வைக்கும் ட்விஸ்ட் படத்தை மிகவும் சுவாரிசத்துக்கு கொண்டு செல்கிறது இந்த படத்தின் கதை ஒரு உண்மை கதை சரி படத்தில் நடித்தவர்களும் கதையும் பார்ப்போம்
டெவினோ தாமஸ் நாயகன அறிமுகம் நாயகியாக பியா இவர் என்றாலே சேட்டை அரட்டை காமம் கவர்ச்சி எல்லாம் கொஞ்சம் தாராளம் தானே இந்த படத்திலும் அப்படி தான் இவர்களோடு ரோகினி, சுகாசினி, கலைராணி,தீபா ராமானுஜம்,உதயபானு மகேஸ்வரன் கெளரவவேடத்தில் பிரபு மற்றும் பலர் நடிப்பில் தரன் இசையில் அகிலன் ஒளிப்பதிவில் பி.ஆர் விஜயலட்சுமி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அபியும் அணுவும்
அனு ( பியா ) சமூக நலம் நாடுகிறவள். பேஸ்புக் விரும்பி. இவளது நட்பு கிடைக்கப்பெற்ற அபிமன்யூ(டொவினோ தாமஸ் ) அவளை விரும்புகிறான் .அதாவது காதலிக்கிறான்.
“என்னடா காதல்? செக்ஸ்தானே?” என்கிற அபியிடம் “ஆமாடி! கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கல்லாம் என்ன காவியமா படிக்கிறாங்க?”என்கிற அபி ஒரு கட்டத்தில் பெற்றோருக்கு சொல்லாமலேயே அவளை கல்யாணம் செய்து கொள்கிறான். ஆங்கிலப்படங்களில் பார்ப்பதைப்போல் உதடுகள் கடித்து உடல் கசங்கி உறவுகள்.அவளின்றி அவனில்லை.அவனின்றி அவள் இல்லை.
வாழ்க்கை இனிமையாக ,அழகாக விரைவாக ஓடுகிறது. அவள் கர்ப்பிணி?
இதன் பிறகுதான் அவர்களுக்கு இடையில் கடும்பிளவு! அவர்களை இந்த சமுதாயம் ஏற்குமா என்கிற அச்சம்! காரணம் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் .இது எப்படி நிகழ்ந்தது ? என்பது தான் மீதி கதை
இந்த படத்தின் கதைகளம் ஒரு உண்மை சம்பவம் இந்த கதையை இயக்கியுள்ள இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமியை கண்டிப்பாக பார்ட்டியே வேண்டும்
படத்தின் நாயகன் டோவினோ தாமஸ் அறிமுக நாயகன் இவர் வசனம் பேசும் பொது மலையாள வாடை அனால் நன்றாக தான் உள்ளது
நாயகி பியா எப்பவும் போல அரட்டை கச்சேரி ஒரு துருதுருப்பு கொஞ்சம் கவர்ச்சி இப்படி வளம் வருகிறார் படத்தின் கதை ஓட்டத்துக்கு ஏற்ப நாயகி
மற்றபடி அவர்களக்கு கொடுத்த பங்கை மிகவும் அழகாக செய்துள்ளனர்
படத்துக்கு மிக பெரியபாலம் என்றால் ஒளிப்பதிவாளர் அகிலன் மற்றும் கலை இயக்குனர் சிவா யாதவ் ஊட்டியும் சரி நாயகன் வீடும் சரி மிக அற்புதம்