21.5 C
New York
Thursday, September 19, 2024

Buy now

spot_img

அபிராமி ராமநாதன் அவர்கள் எழுதிய உன்னோடு கா

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் நடிப்பது மனதிற்கு மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது.

இப்படத்திற்காக நான் இரண்டு வித கெட்டப்புகளில் நடித்து இருக்கிறேன். கிராமத்தில் கையில் அருவாளை தூக்கிக்கொண்டு வெட்ட துரத்தும் முரடனாகவும், சென்னையில் தன் மகனின்காதலை சேர்த்து வைக்க போராடும் பாசமுள்ள தந்தையாகவும் நடித்துள்ளேன். இப்படத்தில்ஊர்வசி அவர்கள் எனக்கு மனைவியாக நடித்துள்ளார். நாங்கள் ஜோடியாக இணைந்துநடித்தாலே படத்தில் கலாட்டாதான்.

இப்படத்தின் கதையை திரு. அபிராமி ராமநாதன் அவர்கள் எழுதி இருக்கிறார். கதையைகேட்டவுடன் இப்படத்தில் நடிப்பது என முடிவு செய்துவிட்டேன். இது போன்ற நகைச்சுவைபடம் அமைவது அரிதானது. இன்றைய காலகட்டத்தில், ஒரு படத்தை குடும்பத்தினருடன்வந்து பார்ப்பது மிக மிக அரிது. காரணம் பொழுது போக்கு அம்சம் நிறைந்த கதைகள்குறைந்தே வருகிறது. இக்குறையை அபிராமி ராமநாதன் அவர்கள் “உன்னோடு கா” படத்தின்மூலம் நிவர்த்தி செய்து விட்டார். அது மட்டுமின்றி நகைச்சுவையாக, நல்ல கருத்தையும்சொல்லியிருக்கிறார்.

படம் முழுக்க ஒவ்வொரு காட்சிகளிலும், ஊர்வசி அவர்களும் நானும் ரசித்து, சிரித்தபடியேநடித்து இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து படப்பிடிப்பு குழுவினரும் ரசித்து, சிரித்ததுகுறிப்பிடத்தக்கது. மேலும் கதை நாயகனாக ஆரி, நாயகியாக மாயா, பாலசரவணன், மிஷாகோஷல், கை தென்னவன், ஸ்ரீரஞ்சனி, மனோபாலா, மன்சூரலிகான், M.S.பாஸ்கர், சுப்பு பஞ்சு,ராஜாசிங், வினோத்சாகர், தேனிமுருகன், சண்முகசுந்தரம், சாம்ஸ், நாராயண் என சிறந்தகலைஞர்களுடன் இணைந்து நடித்து இருப்பது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட கதைக்களத்துடன், குடும்பம், காதல், கல்யாணம்,நட்பு, என பல அம்சங்களுடன் வரவிருக்கும் “உன்னோடு கா” படம் இந்த ஆண்டின் சிறந்தநகைச்சுவை படமாக கண்டிப்பாக அமையும் என எதிர்பார்க்கிறேன். எங்களை வாழ வைக்கும்தமிழக திரை ரசிகர்களுக்கு, நாங்கள் ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறோம், என்பதுபெருமகிழ்ச்சியாக உள்ளது.

ஒளிப்பதிவில் சக்திசரவணன், இசையில் C.சத்யா, நடனத்தில் கல்யாண், அதிரடி ஆக்சன்காட்சிகளில் விஜய்ஜாக்குவார் என சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தில்நானும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னுடைய நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை 60-க்கும் மேற்ப்பட்ட புதியஇயக்குனர்கள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குனர் ஆர்.கேவும்,அறிமுக இயக்குனரே. இளைய தலைமுறையான இவருடனும், இவருடைய டீமுடன்இணைந்து பணிபுரிந்தது என் இளமை கால நாட்களை நினைவுபடுத்துகிறது. என்றுஇளையதிலகம் பிரபு அவர்கள் மனம் திறந்து கூறினார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE