7.9 C
New York
Friday, April 26, 2024

Buy now

Pariyerum Perumal

 

படத்தின் இயக்குனர் இது என்ன படம் என்ற ஆவலை டைட்டிலில் மட்டும் இல்லாமல் விளம்பரங்களிலும் உண்டுபண்ணியுள்ளது ஆம் இது ஒரு நாயின் கதையா இல்லை மனிதனுக்குள் எத்தனை நிறம் என்பதை மிக சிறப்பாக சொல்லி இருக்கும் படம் இயக்குனர் டச் என்பது படத்தில் பல இடங்களில் உள்ளது குறிப்பாக நாய் இந்த படத்தின் முக்கிய அம்சம் என்னடா ஒரு நாய்க்கு இப்படி ஒரு பில்டப் என்று படம் பார்க்கும் பொது தோணும் ஆனால் அந்த நாய்க்கு இயக்குனர் மிக சிறப்பான ஒரு காட்சி இரண்டாம் பாகத்தில் வைத்து இருப்பார் பல காட்சிகளில் நம்மை சிந்திக்க வைக்கிறார் அதோடு சிறந்த கருத்துகளை நல்ல சிந்தனையுடன் கூறியுள்ளார்.

இயக்குனர் நம் மனதை நட்பிலும் பாசத்திலும் காதலிலும் நம்ம நெருட வைக்கிறார் என்று சொன்னால் மிகையாகது. இது ஒரு இயக்குனர் படம் என்று தான் சொல்லவேண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு முதல் படமா என்று நம்மை வியக்கவைக்கிறார் பல இடங்களில் மிக தைரியமாக காட்சிகள் வைத்து நெகிழ வைக்கிறார்.

அதே போல இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரங்களை செதுக்கியுள்ளார் என்று தான் சொல்லவேண்டும் அதேபோல படதிதின் கதாபாத்திரங்களும் தேர்ந்தெடுத்து நடிக்கவைக்கிறார் ஒவ்வொருவரும் தன் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். அதேபோல ஒவ்வொரு டெக்னிஷன் கதையோட்டத்துக்கு உணர்ந்து பணியாற்றியுள்ளனர்.

சரி கதியும் நடித்தவர்களையும் பாப்போம் கதிர் கதையின் நாயகனாக மண்ணின் மைந்தனாக நடித்துள்ளார் அதேபோல நாயகி கயல் ஆனந்தி காமெடி மட்டும் இல்லை என்னால் சிறப்பாக நடிக்கவும் முடியும் என்று போட்டி போட்டுள்ள யோகிபாபு இவர்களுடன் வில்லனாக லிஜிஷ் மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி அருகில் உள்ள புளியங்குளம் கிராம மக்கள் ஒளிப்பதிவு ஸ்ரீதர் படம் முழுக்க கிம்பல் முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் இசை மண்ணின் மைந்தன் சந்தோஷ் நாராயணன் கலை இயக்குனர் ராமு பல இடங்களில் எது செட் என்று நம்மை யோசிக்க வைத்துள்ளார் . பாடல்கள் மிகவும் ஆழமான கருத்துகளை கொண்ட வரிகளை விவேக் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தின் தயாரிப்பாளர் புரட்சி இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் மிக சிறந்த (பா)டம் தான் பரியேரும் பெருமாள்.

ஒரு ஏழை அதோடு தாழ்த்தப்பட்ட மாணவன் ஒரு சட்ட கல்லூரியில் படிக்கிறான் அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்த ஒரு மாணவன் அவனுக்கு அந்த கல்லூரியில் ஏற்படும் அசிங்கமும் தமிழ் நாட்டில் ஆங்கிலம் தெரியவில்லை என்பதானால் அவனுக்கு ஏற்படும் அசிங்கம் இந்த சமயத்தில் அவருக்கு உதவி செய்யும் சக மாணவி இந்த நட்பால் ஏற்படும் தொல்லைகள் தான் இந்த படத்தின் கதை இந்த கருவை மிக அழகாக இயக்குனர் சொல்லி இருக்கும் படம்.

கதையின் நாயகனாக கதிர் நடிப்பில் பிரமிக்கவைக்கிறார் இவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று ஆச்சிரியம் தான் ஏற்படுகிறது இந்த கதைக்கும் இந்த காதபாதிரதுக்கும் இவரை தவிர வேறாரக இருந்தாலும் இப்படி பொருந்துமா என்பது ஒரு கேள்விக்குறிதான் அப்படி ஒரு நடிப்பு இயக்குனர் கதிர் விஷயத்தில் மிக கொடுமைக்காரர் என்று தான் சொல்லணும் பாவம் படத்தின் முதல் காட்சியில் இருந்து அவரை பிழிந்துள்ளர் ஓடவைப்பதும் சேற்றில் துவைப்பதும் மனிதன் மேல் சிறுநீர் இப்படி ஒன்றும் விட்டு வைக்கவில்லை அடி மேல் அடிவாங்கும் ஒரு அமைதியான பாத்திரம் மொத்தத்தில் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் அதோடு இயக்குனரின் நடிகராகவும் இருந்து இருக்கிறார்.

படத்தின் நாயகி கயல் ஆனந்தி ஏற்கனவே பல படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த படத்தில் மீளும் ஒரு படி மேலோங்கி நிற்கிறார் காட்சிக்கு காட்சி நம்மை நெகிழவைக்கிறார் நடிப்பால் இப்படி ஒரு காதலி இப்படி ஒரு தோழி நமக்கு கிடைப்பாளா என்று ஏங்கவைக்கிறார் இவரின் அப்பாவித்தனமான நடிப்பால் நம்மை கட்டி போடுகிறார் . அதேபோல படத்தில் நடித்த அனைவரும் நம்மை பிரமிக்கவைக்கிறார்கள் படத்தின் மிக பெரிய பலம் இசையமிப்பாளர்  சந்தோஷ் நாராயணன் மண்ணின் இசை அதேபோல பாடல்கள் அட கருப்பி பாடல் நான் யார் பாடம் எல்லாம் மயிர் கூச்சரிக்க வைக்கிறது. அதேபோல ஒளிப்பதிவாளர். கதைக்கும் இயக்குனர் எண்ணமும் அறிந்து மிக சிறந்த ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

இயக்குனர் பா. தான் ஒரு நல்ல இயக்குனர் மட்டும் இல்லை நல்ல தயாரிப்பளர் என்றும் நிருபித்துள்ளார் நான் இயக்கம் படங்களில் மட்டும் இல்லை நான் தயாரிக்கும் படங்களும் சமுதாயா நோக்கு இருக்கும் என்பதை உணர்த்தி இருக்கிறார் .பா. ரஞ்சித் என்ற முகவிரியை வைத்து முதல் படத்தை இயக்கு இருந்தாலும் அனால் இது மாரி செல்வராஜ் படம் என்று நிருபித்துள்ளார் இயக்குனர் அதற்கு கொஞ்சமும் நானும் சலிக்கவில்லை என்று நடித்துள்ளார் கதிர்

 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE