6.3 C
New York
Thursday, April 25, 2024

Buy now

Chekka Chivantha Vaanam

Chekka Chivantha Vaanam is easily Maniratnam’s best film in recent times.The film, which starts off on a brisk note, moves at a blistering pace, not slackening anywhere from start to finish.Seldom does one comes a film that scores so handsomely in all departments that there is no other option but to declare it a wholesome entertainer.Be it casting, characterisation or performances, the cast and crew seem to be spot on in all departments.

செக்க சிவந்த வானம் படத்தின் கதை: ஒரு டான் கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தவர் யார் என்பதை கண்டிபிடிக்க அவரது மூன்று மகன்களும் போராடுவதே இந்த படத்தின் கதையாகும். வயதான டான் சேதுபதி (பிரகாஷ் ராஜ்), அவரது மூன்று மகன்கள் வரதன் (அர்விந்த் சாமி), இவர் அதிக கோபம் கொள்ளும் குணம் உடையவர், இரண்டாவதாக தியாகு (அருண் விஜய்) இவர் ஒரு கருப்பு குதிரை போன்றவர், மூன்றாவதாக எதி( எஸ்டிஆர்) குறைந்த பிரபலம் கொண்டவர். இதற்கு பின்னால் என்ன உள்ளது என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் கதையாகும், சஸ்பென்ஸ் தொடர்ந்து வரும் நிலையில், சின்னப்பதாஸ் (தியாகரஜன்) அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் வரும் காட்பாதர், எந்த தவறும் செய்யாதவராக இருக்கிறார். படத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் டைரக்டர் டச் பல இடங்களில் பிரதிபலிக்கிறது.

படத்தின் முதல் பாதி, குறிப்பாக பல்வேறு கேரக்டர் அறிமுகம் செய்வதிலும் சேதுபதி மரணம் குறித்தும் பல்வேறு யூகங்களை எழுப்பி வருகிறது, இதுமட்டுமின்றி ராசூல் (விஜய்சேதுபதி) போலீசாகவும், வரதனின் சின்ன வயது நண்பராகவும் நடித்துள்ளார். செழியன்(சிவா ஆனந்த்), சித்ரா (ஜோதிகா) வரதனின் மனைவி, செழியனின் மகளாக நடித்துள்ளார்.

படத்தின் இரண்டாம் பாகம், சேதுபதியின் சொத்துகளை அடைய அவரது சகோதர்கள் செய்யும் முயற்சிகள் பற்றியும் விளக்குகிறது. மணி ரத்தினம் கமர்சியல் பாணிக்கு மாறி ஒவ்வொரு நடிகரையும் மாஸ் ஸ்டாராக மாற்றியுள்ளார். படத்தில் ஒவ்வொரு நடிகருக்கும், நடிக்க சமமான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான மணிரத்னம் படங்களை உள்ள அனைத்து அம்சங்களும் இதிலும் இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி கூடுதலாக, நிறைய நடிகர்களும் நடித்துள்ளதால், படம் சிறப்பாக அமைந்துள்ளது. பெண் நடிகர்களை பொறுத்த வரை, குறைவாக காட்சிகளை நடிக்க வாய்ப்பை பெற்றுள்ளனர். படத்தின் ஸ்கிரிப்ட் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

படத்தின் மிக பெரிய பலம் என்றால் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு கதாபாத்திரம் தான் தமிழ் சினிமாவின் மிக பெரிய பலமாக அமைக்கிறார் விஜய் சேதுபதி நடிப்பில் மிக பெரிய போட்டியாக இருக்கிறார்கள் அனைவரும் நடிப்பில் சிகரமாக இருக்கிறார்கள

இயக்குனர் இந்திய சினிமாவின் பொக்கிஷம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள படம் என்று சொன்னால் மிகையாகாது காட்சிக்கு காட்சி மணிரத்தினம் நம் முன் இருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கிறார்.

படத்தின் அடுத்த பலம் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் மட்டும் இல்லை ஒவ்வொரு காட்சியிலும் மணிரத்தினதுக்கு துணையாக இல்லை மனசாக இருந்து இருக்கிறார்.

படத்தின் அடுத்த மிக பெரிய பலம் வசனம் ஒவ்வொரு காட்சிக்கும் பலம் குறிப்பாக சர்ஜரி தழும்பு மரஞ்சிடும் என்று பிரகாஷ் ராஜ் பேசும் இடம் போல பல இடஙகளில் வசனம் பேசியுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE