Home News

0 76

“சீமத்துரை”.

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”.

கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

“ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்.

அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.

வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம் தான் ‘சீமத்துரை'”, என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். D திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, ’மேயாதமான்’ படத்தின் ’தங்கச்சி’ பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை, ’பிச்சைக்காரன்’ படத்தின் படத்தொகுப்பாளரான T வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை ’மரகத நாணயம்’ படத்தின் கலை இயக்குநர் N K ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.

இணை தயாரிப்பு : ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம், புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார்.

0 94

அபிசரவணன் – ஸ்வேதா நடிக்கும்
“ கரிக்காட்டுக் குப்பம் “
பெண் இயக்குனர் J.M.நூர்ஜஹான் அறிமுகம்
ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக J.M.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயரிக்கும் படத்திற்கு “ கரிக்காட்டுக் குப்பம் “ என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள் இன்று அடுப்பங்கரையை விட்டு புதிய சிந்தனைகளுடன் எல்லாத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் முஸ்லீம் பெண்கள் பல்துறை வித்தகர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த “ கரிக்காட்டுக் கும்பம் “ உருவாகிறது. சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் பத்து இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவது தான் இந்த கரிக்காட்டுக் குப்பம் “ இந்த இடம் அமானுஷ்ய சக்திகள் கூடாரம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் ECR பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள், சுனாமி போன்ற பலி வாங்குதல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த உண்மையை அடிப்படையாக கொண்டு “ கரிக்காட்டுக் குப்பம் “ உருவாகிறது.
அபி சரவணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார். இவர் விவேக் நடித்த “ நான் தான் பாலா “ படத்தின் நாயகியாக நடித்தவர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – எட்வின் சகாய் / இசை – ஜான்பீட்டர்
நடனம் – லாரன்ஸ் சிவா / பாடல்கள் – சினேகன்
ஸ்டன்ட் – பயர் கார்த்திக்
படம் பற்றி இயக்குனர் J.M.நூர்ஜஹான் கூறியதவது..
இன்றைய இளைஞர்கள் கல்லூரி வாழ்கையை கடப்பதற்கு மும்பே காதல் என்கிற மாயையில் விழுந்து விடுகிறார்கள். தன் காதலியோடு ஊர் சுற்ற வேண்டுமென்று, வசதி படைத்தவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளவும் பெற்றோர்களை வற்புறுத்தி பைக் வாங்கிக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசைக்காக கஷ்டப் பட்டுகடன் வாங்கி, வாங்கிக் கொடுத்த பைக்கில் காதளிகளோடும், பைக் ரேஸிலும் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு காதலனும், காதலியும் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால் காதலன் இறக்கிறான். தன் காதலியுடன் வாழ முடியாமல் நிராசையுடன் இறந்த அந்த ஆத்மாவின் நிலை என்ன ? என்பதை திகில் கலந்த படமாக “ கரிக்காட்டுக் குப்பம் “ உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் J.M.நூர்ஜஹான்

0 90

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது :- தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் இந்த படத்தின் படபிடிப்புக்காக ராஜஸ்தான் , ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு படபிடிப்புக்காக சென்றோம். அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக்கொண்டு படபிடிப்பை நடத்தினோம். இந்த படத்தின் கதை நான் “ சிறுத்தை “ படத்துக்காக படபிடிப்பில் இருந்த போதே எனக்கு தெரியும். அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மை சுற்றியே இந்த கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்த கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன். நாம் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே வரும் யாரும் நம்முடைய கண்ணை பார்க்க மாட்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஒருவர் நம்முடைய கண்ணை பார்ப்பார் அவரிடம் சென்று பேசினால் அவர் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நம்மிடம் சொல்லுவார் என்று என்னிடம் “ மாற்று உலகத்தை “ பற்றி அதிகம் படித்த என்னுடைய நண்பன் கூறுவார். அதே போல் தான் இந்த படத்தின் கதை என்னை சுற்றியே வந்துக்கொண்டே இருந்தது. நாங்கள் ராஜஸ்தானுக்கு படபிடிப்புக்கு சென்ற போது அங்கே ஓரிடத்தில் இதோ நம்ம கார்த்தி வரார் என்ற தமிழ் குரல் கேட்டது. அவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் நம்ம சென்னை , சௌகார்பேட்டை மக்கள் தான். அவர்களிடம் நீங்கள் எப்படி இங்கே எப்படி என்று கேட்டபோது “ பூஜைக்காக வந்தோம் , குடும்ப நிகழ்வுக்காக வந்தோம் “ என்று பதில் அளித்தனர். தீரன் அதிகாரம் ஒன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல் , காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல் , காரை வேகமாக ஒட்டி செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல் , மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்த படத்தில் தந்துள்ளேன். தீரன்-ல் நான் இயக்குநரின் நடிகராக தான் இருந்துள்ளேன். இந்த படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றார் கார்த்தி.

நிகழ்ச்சியில் இயக்குநர் வினோத் பேசியது
போலீஸ் என்றாலே தவறானவர்கள் தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்கு காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள் தான். அந்த தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எப்படி சினிமாவில் , அரசியலில் , பத்திரிக்கையாளர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதே போல் தான் காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள். நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் தான் இந்த படத்திலும் இருப்பார்கள். தீரன் அதிகாரம் ஒன்று கமர்ஷியல் படம். எல்லோருக்கும் இப்படம் ஒரு பாடம் போல் இருக்கும். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். படத்தில் தீரன் திருமாறன் என்ற போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். போலீசை சுற்றி நடக்கும் பரபரப்பான கதையாக இதை உருவாக்கியுள்ளோம். ஜிப்ரான் மிகச்சிறந்த பாடல்களை இந்த படத்துக்கு தந்துள்ளார் என்றார் இயக்குநர் வினோத்.

0 105

Very few Indian have well and truly marked their stamp in the international arena in the field of arts. One very important name is the Acadamy Award winning Sound designer Resul Pookutty whose works are becoming a piece of brilliance all over the world. The sensational news is that the Oscar Award winner is all set to please us and give us altogether an entirely different experience as an actor. Directed by Prasad Prabhakarn this movie will have Resul Pookutty playing a sound designer who wants to record all the sounds in world famous Thrissur Pooram festival. This prestigious project is produced by Mr.Rajeev Panakal of ‘Palm Stone Multimedia’, who are one of the largest aggregators of Indian movies.

Speaking about this, director Prasad Prabhakaran says, “ I can proudly say this is a never before attempted concept. Pooram festival in Thrissur is the biggest festival in the Universe, attended by a million people every year. This festival happens for seven days in total. There are thousands of artists playing hundreds of instruments in the event and the atmosphere will be absolutely electric and totally magical. It has been Resul pookutty’s real life dream to record the sounds of Pooram live. This movie is about a sound designer who wants to capture the sounds of this festival in his mike and record it. To our delight and honour Legendary Resul Pookutty plays this sound designer role. This movie is titled ‘Oru Kadhai Sollattumaa’. I am so proud Resul Pookutty chose this script to making his acting debut. Capturing the entire festival, visually and it’s sounds, for a movie’s purpose was a monstrous challenge and I must accept that my team has pulled it off incredibly well. We started our meticulous planning and preparations four months before the shoot itself. Over 80 technicians from Hollywood and Bollywood worked tirelessly in capturing the sounds of Pooram live for our movie . The camera team have captured over 300 live performing artists using 22 cameras . This movie will be such an experience that one can watch it even with their eyes closed. The sounds and the narration will convey the festival, moods and the story so brilliantly. The music of the film is done by Rahul Raj and the lyrics were penned by Vairamuthu. This movie is made in four languages with Malayalam, Telugu and Hindi being the other three languages. I am so very excited about the outcome and can’t wait for the audience to witness the experience that we have achieved to bring out”.

The songs and trailer has been edited by Antony and songs were recorded in AR Rahman’s studio. The audio rights of the movie has been bagged by Sony Music and this News has become an additional endorsement for the world class music and sounds that is expected to decorate this film.

ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் “ஒரு கதை சொல்லட்டுமா”.

கலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பது தான். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை ‘Palm Stone Multimedia’ ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ”இந்த படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாக கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசை கருவிகளை வாசிக்கும் அந்த சூழல் மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரஸூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்திற்கு ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என தலைப்பிட்டுள்ளோம். ரஸூல் அவர்கள் இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில் எனக்கு மிகவும் பெருமை. முழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. எனது அணி பெரும் பாடுபட்டு இந்த அசுர காரியத்தை வெற்றிகரமாக முடித்தது. படப்பிடிப்புக்கு நான்கு மாதங்கள் முன்பே தயார் பணிகளை தொடங்கிவிட்டோம். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த 80 மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை ரெக்கோர் செய்யவதில் பணிபுரிந்தனர். 22 காமெராக்களை கொண்டு அந்த விழாவில் வசித்து அசத்திய 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம் . கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும் படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. எங்களது அசுர உழைப்பை மக்கள் கண்டு ரசித்து பாராட்டும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் ”

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை ஆண்டனி எடிட் செய்துள்ளார். இப்பட பாடல்கள் AR ரஹ்மான் அவர்களின் ஸ்டுடியோவில் ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது . இப்படத்தின் ஆடியோ உரிமையை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் உலகத்தர இசை தரத்திற்கு இந்த செய்தி மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.

0 107

“Vizhithiru” directed by Meera Kathiravan is all set to release on November 3rd. This film on anthology has many lead characters and significant among them will be Rahul Bhaskaran,a talent that many industry people predict will make it big. Rahul, a native of Madurai had spent considerable time of his youth gauging the length and breadth of this country , courtesy his father who had a transferable central government employment. According to Meera Kathiravan ,the director, Rahul has shown immense promise in terms of commitment and focus.

Rahul Bhaskaran says “I am paired opposite Erica fernandes, a popular name in the model world. I play as the son of a millionare to whom money doesn’t matter at all. This film has many segments and my segment has impressed many who had seen this film already. My birth in Tamil Nadu and upbringing across the country actually helped me to master both the languages Tamil and Hindi. I was the one who trained Erica on Tamil. This actually helped me to improvise my skills too. My role model is Vijay Sethupathy anna. My growth, i pray should be very similar to his growth, from the down, slow and steady. I am indebted to Director Meera Kathiravan. His mental strength will be rewarded for sure. If the pre release mouth talks are to be believed “Vizhithiru” will be worth staying awake “.

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றில் ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொடுவார் என பலரால் கருதப்படும் ராகுல் பாஸ்கரன், மதுரையை சேர்ந்தவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்பர் நிறைந்த வேலையால் இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர் ராகுல் பாஸ்கரன். இயக்குனர் மீரா கதிரவன், ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.

இப்படம் குறித்து நடிகர் ராகுல் பாஸ்கரன் பேசுகையில், ” இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன். பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட தெரியாத, ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன். பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதை சிறப்பாக இருப்பதாக படத்தை ஏற்கனவே பார்த்த பலர் கூறினர் . தமிழ்நாட்டில் பிறந்து இந்திய முழுவதும் வாழ்ந்துள்ளதால் எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளுமே சரளமாக வரும். இப்படத்தில் எரிக்கா தமிழ் வசனங்களை கற்றுகொள்ள நான் உதவி செய்தது எனது மொழியாற்றலையும் மேன்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. சினிமாவில் எனது முன்மாதிரி விஜய் சேதுபதி அண்ணா தான். கீழிருந்து போராடி பெற்ற அவரது வளர்ச்சியை போல் என் வளர்ச்சியும் இருக்கு வேண்டுமென ஆசைப்படுகிறேன். இயக்குனர் மீரா கதிரவன் அவர்களுக்கு என்றுமே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது மனவலிமைக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைக்கும். ரிலீசுக்கு முன்பு ‘விழித்திரு’ படத்தை பார்த்தவர்கள் தந்த பாராட்டுக்கள் ரிலீசுக்கு பிறகும் தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் வரும் என நம்புகிறேன் ”.

0 119

One actor who has never stopped growing as a creator is Siddharth. His love for cinema and exploration is reaching new heights with his upcoming release ‘Aval’, a horror flick, slated to release on November 3rd. Apart from playing the male lead, he has co written this script with director Milind Rau. Siddharth had also co produced this venture on behalf of his production company Etaki Entertainment along with Viacom18 Motion Pictures,a giant in concept oriented films that are made in all Indian languages. ‘Trident Arts’ Ravindran who is fast establishing himself as one of the most trusted names in film distribution, with ‘Vikram Vedha’ being his latest outing, is all set to release ‘Aval’ in a grand way.

Speaking about the movie, Siddharth says,” I am a huge fan of horror movies and has always felt iconic horror films are fewer in Indian cinema. This was the reason myself and Milind Rau decided to make ‘Aval’. Myself and Milind Rau are very good friends for ages, from the time we worked as assistant directors with Mani Ratnam sir. Though ‘Aval’ is based on a real life incident, we also did an extensive research about this script, genre and audience’s mindset about horror. We must admit that the concept of horror in Indian cinema has changed a lot over the past couple of decades that it has been diluted heavily. We wanted to do a pure horror movie on par with ‘The Conjuring’, ‘Paranormal activity’ and ‘The evil dead’ and that idea was the birth of ‘Aval’. Aval’ is a hardcore horror flick which will scare and frighten the audience with a strong content and at every opportunity. I am working with Atul Kulkarni after a long gap in ‘Aval’. His dedication and inputs have been fabulous. Andrea has been such a strength for the movie and this role will be one of the highlights of her wonderful career. I am very excited about the outcome and I am sure audience are in for a horror treat from November 3rd “.

ஒரு படைப்பாளியாக என்றுமே தன்னை அடையாளம் காட்டி கொள்பவர் நடிகர் சித்தார்த். சினிமா மீதான அவரது காதலும், அதில் அவருக்கு இருக்கும் தேடலின் அடுத்த பரிமாணம், அவரது அடுத்த படமான ‘அவள்’படத்தில் தெரிய வருகிறது.திகில் படமான ‘அவள்’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. கதாநாயகனாக மட்டும் இல்லாமல், இப்பட இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தின் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். இந்திய சினிமாவில் தரமான கதைகளை தேடி கண்டெடுத்து தயாரிக்கும் ‘Viacom18 Motion Pictures’ நிறுவனத்தோடு தன் Etaki Entertainmemt என்ற நிறுவனம் மூலம் இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார்.

‘விக்ரம் வேதா; போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கென பெரும் பெயரையும் மதிப்பையும் சம்பாதித்திருக்கும் ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் ‘அவள்’ படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளார்.

‘அவள்’ குறித்து சித்தார்த் பேசுகையில், ” திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உண்மையிலே பயமுறுத்தும் பேய் படங்கள் நிறைய வரவில்லை என்ற வருத்தம் என்றுமே இருந்தது. இதனாலேயே நானும் மிலிண்ட் ராவும் ‘அவள்’ படத்தை செய்ய முடிவெடுத்தோம். நானும் மிலிண்ட் ராவும் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள். நானும் மிலிண்ட் ராவும், மணி ரத்னம் சாருக்கு உதவி இயக்குனர்களாக ஒரே சமயத்தில் சேர்ந்தோம். நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை ‘அவள்’. இக்கதை, பொதுவாக திகில் படங்கள் மற்றும் திகில் படங்களை பற்றிய மக்களின் மனநிலையை பற்றி நிறைய ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். கடந்த சில காலமாகவே திகில் படங்கள் பற்றிய கண்ணோட்டம் மக்களிடையே மாறியுள்ளது. இதனை மாற்றி ‘The Conjuring’ , ‘Paranormal Activity’ , ‘ The Evil Dead’ போன்ற படங்களுக்கு இணையான திகில் படத்தை தர நானும் மிலிண்ட் ராவும் நினைத்தோம். இந்த எண்ணத்தில் பிறந்த படம் தான் ‘அவள்’. இது ஒரு பயத்தில் உறையவைக்கும் தீவிரமான திகில் படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அதுல் குல்கர்னியுடன் நடித்துள்ளேன். அவரது அர்ப்பணிப்பும்,இப்படத்திற்கான அவரது சிந்தனைகளும் பெரும் பலமாக இருந்தது. ஆண்ட்ரியா இப்படத்திற்கு தூணாக இருந்தார். அவரது இந்த கதாபாத்திரம், அவரது சுவாரஸ்யமான நடிப்பு வாழ்வில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும். வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் ‘அவள்’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திகில் விருந்தாக நிச்சயம் இருக்கும் ”

0 106

2018 is definitely going to be a year of huge jubilations for Suriya fans as it gets loaded with more surprises. While plans are going on full swing to release Thaana Serndha Koottam for Pongal 2018, the next Diwali isn’t going to be an exception. It is officially confirmed that Suriya 36 directed by Selvaraghavan will commence the shoot in January 2018 and hit screens for Diwali 2018. During these days, when the big tickets with big stars juggle the release dates even during last minute, Dream Warrior Pictures creates a sensational surprise by announcing its release even before the shooting begins. It was decades back when the prestigious production studios of Tamil cinema would make such prior announcements of release.

SR Prakash Babu and SR Prabhu of Dream Warrior Pictures have been churning out top-notch films with intense scripts and good contents. With a tremendous combination of power houses like Selvaraghavan and Suriya coming together, one can really expect an unconventional yet realistic spell from this duo.

Right now, the process of finalizing others in the cast and crew is happening on full swing and official announcement regarding this film will be made sooner.

0 115

In a day and age where movies talking about social issues are making national headlines, ‘Aramm’ , a strong social based political movie is all set to release on November 10th worldwide. Directed by Gopi Nainar, starring lady super star Nayanthara as the protagonist and produced by Kotapadi J Rajesh, ‘Aramm’ will be distributed by Mr.Ravindran of ‘Trident Arts’. ‘Trident Arts’ are well known to have released super hits with ‘Vikram Vedha’ being the latest in their kitty. Speaking about ‘Aramm’ Mr.Ravindran says, “This is going to be one of the important films of the year. It has such a solid content with a strong social message. The way director Gopi Nainar has handled this script is commendable. Nayanthara has given a great dimension and value to her collector role. We are proud to release ‘Aramm’ “ . ‘Aramm’ is a Ghibran musical, Om Prakash has done the cinematography. The expectations for ‘Aramm’ have always been on the rise and is reaching new heights with the release date being announced now.

சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் ‘அறம்’. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அறம்’. ‘விக்ரம் வேதா’ போன்ற தரமான படங்களை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து , தங்களது நிறுவனத்துக்கு பெரும் பெயரை ஈன்றெடுத்த ‘Trident Arts’ நிறுவனம் ‘அறம்’ படத்தை நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளது.
இது குறித்து ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் பேசுகையில், ” இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘அறம்’ இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குனர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். ‘அறம்’ படத்தை ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு மிகுந்த பெருமை” என்று கூறினார். ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது.

0 101

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார் சதீஷ் குமார்
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது.
சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆர். ன் வரலாறு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது.
ரமணா கம்யூனிகேஷன்ஸ்-ன் முந்தைய தயாரிப்புகளான ‘காமராஜ்’ மற்றும் ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் நடித்திருந்தனர், அதைப்போன்று இப்படத்துக்கான நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர் சினிமா, மற்றும் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல தென்னிந்திய மொழிப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர், இப்படத்துக்காக வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற சண்டைப்பயிற்சிகளை கற்று வருகிறார்.
அண்ணாவாக ‘பெரியார்’ திரைப்படத்தில் நடித்த S.S.ஸ்டான்லி இப்படத்திலும் அண்ணாவாக நடிக்கிறார் ‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இப்படத்திற்கும் எழுதியுள்ளார்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்கிறார்.
நவம்பர் 8 ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்கிறார்