Don’t judge book by its cover and so with this film’s title, if you’re brimmed with different perceptions. Incisively, a title like ‘Pathu Second Mutham’ would invariably derive us into preoccupied assumptions. Furthermore, for the voracious readers of Late novelist Sujatha’s works, one would significantly find the striking similarities for the name. But both these perspectives are cleared off by filmmaker Vincent Selva, who says, “Sujatha sir’s novel Pathu Second Mutham deals with a similar concept of cracking down a mystery over a span of limited deadline. So I got inspired and chose the title and the female protagonist in this film has to solve a baffling puzzle in the quickest move. Apart from these instances, there aren’t any other similarities for my film has a fresh script.”
The filmmaker has roped in newcomers to play the title roles excluding National award winning actor Thambi Ramaiah, who plays an important character. Opining upon the star-cast, “Soon after writing the script, it was evident that story and characterizations demanded newcomers. So we decided to go for them. The film deals with women trying to achieve what she desires enroute violent mode. To make sure that the raciness isn’t hampered, the film will not have any songs, only background score.”
Attractive new face Geetha plays the lead role alongside the new hero Sarish. Others in the cast include Mr India Srinivasan, who will be seen as antagonist and Power Star will appear in important character. The technical team includes Venkatesh (Cinematography), San Lokesh (Editing), Story and dialogues (JR Rubhan).
Lakshmi Talkies is producing this film, which is shot against the backdrops of Vagamon, Hyderabad and Kodaikanal.
பத்து செகண்ட் முத்தம்
புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அதுபோலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது. பல்வேறு கோணங்கள் இருக்கும். பத்து செகண்ட் முத்தம் என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும். தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களை தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்த தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். இந்த கோணங்களை இயக்குனர் வின்செண்ட் செல்வா விளக்குகிறார். அவர் கூறும்போது, “சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்வது தான். அந்த தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.
இயக்குனர் வின்செண்ட் செல்வா ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். அதை பற்றி கூறும்போது, “இந்த கதையை எழுதி முடித்தவுடனே புதுமுகங்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களாக நடிக்க வைத்தேன். பெண் சாதிக்க நினைத்த விஷயம் வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றி பேசுகிறது. படம் அதிவேகமாக இருக்கும், படத்தில் பாடல்கள் இல்லை,பின்னணி இசை மட்டுமே உள்ளது.
புது முகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க , மிஸ்டர் இந்தியா ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை, வசனம் ரூபன் எழுத,சான் லோகேஷ் எடிட்டிங்கில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில் படம் உருவாகியிருக்கிறது.
வாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லக்ஷ்மி டாக்கீஸ் தயாரித்திருக்கிறது.