0.7 C
New York
Tuesday, January 14, 2025

Buy now

spot_img

Team NTR30 welcomes Saif Ali Khan on Board

நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். மேலும் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி.

’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலிகானை அதிகாரப்பூர்வமாக தங்கள் அணிக்கு வரவேற்று உள்ளனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து ‘என்டிஆர் 30’ படத்தைத் தயாரிக்கிறது மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் படத்தை வழங்குகிறார். மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது.

தொழில்நுட்பக்குழு விவரம்:

வழங்குபவர்: நந்தமுரி கல்யாண் ராம்,
பேனர்கள்: என்டிஆர் ஆர்ட்ஸ், யுவ சுதா ஆர்ட்ஸ்,
தயாரிப்பாளர்கள்: ஹரிகிருஷ்ணா.கே, மிக்கிலினேனி சுதாகர்,
எழுதி இயக்குபவர்: கொரட்டாலா சிவா,
இசை: அனிருத் ரவிச்சந்திரன்,
ஒளிப்பதிவு: ரத்னவேலு,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சாபு சிரில்,
VFX: யுகந்தர்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE