செயல் படத்தை பற்றி பாக்கலாம் வாங்க இந்த படத்தில் ராஜன் தேஜேஸ்வர் தருஷி ,ரேணுகா , முனீஸ்காந்த் , சூப்பர்குட் சுப்பிரமணியம் , வினோதினி தீப்பெட்டி கணேசன் , ஆடுகளம்ஜெயபாலன் , தீனா,சமக் சந்திரா மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா ஒளிப்பதிவில் விபின் சித்தார்த்விபின் இசையில் ரவி அப்புலு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் “செயல்”
விஜய் படங்களின் சிறந்த படங்களின் பட்டியலில் மிக பெரிய இடம் வகிக்கும் படம் என்றால் அது ஷாஜகான் மிக சிறந்த காதல் கதை அதோடு விஜய்க்கு ஒரு பிரேக் கொடுத்த படமும் என்றும் சொல்லலாம் அந்த படத்தின் இயக்குனர் ரவி அப்புலு இயக்கி இருக்கும் படம் தான் செயல்
வட சென்னை வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் அளவுக்கு பலம் இருந்தும், தான் கொண்ட கொளகை அதாவது செயல் தான் முக்கியம் என அவர்களிடம் அடிவாங்கும் ஹீரோவின் கதையிது.
அதாவது வடசென்னையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பெரிய ரவுடி தண்டபாணி (சமக் சந்திரா). தங்கசாலை மார்கெட்டை மையமாக வைத்து தன் ‘ரவுடி தொழிலை’ செய்து வருகிறார். வடசென்னையே நடுநடுங்கி அவருக்கு மாமுல் தருகிறது. இதனிடையே ரொம்ப ஆர்டினரியான ஃபேமிலி பையன் கார்த்திக் (ராஜன் தேஜேஸ்வர்). அம்மா லட்சுமி (ரேணுகா) சொன்ன சில மளிகை சாமான்கள் வாங்க தங்கசாலை மார்கெட்டுக்கு செல்கிறார். அங்கு தற்செயலாக கார்த்திக்குக்கும், ரவுடி தண்டபாணிக்கும் இடையே உரசல் ஏற்படுகிறது. உடனே வில்லன் தண்டபாணியை அடி அடி என அடித்து உதைத்து துவம்சம் செய்கிறார் நாயகன் கார்த்திக். இந்த அடிதடி வீடியோ வாட்ஸ் அப்பில் தீயாக பரவ, தண்டபாணியின் ரவுடி தொழிலே படுத்து விட்டது.
அதனால மாமூல வருமானம் இல்லாததால் கார் உள்பட அனைத்தும் கையைவிட்டு போகின்றன. மனைவி சாந்தியும் (வினோதினி) அவரைவிட்டு சென்றுவிடுகிறார். இதனால் மார்கெட்டை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கார்த்திக்கை தான் அடி வாங்கிய அதே மார்கெட்டில் வைத்து போட்டுதள்ள முடிவு செய்கிறார். ஆனால், நம்ம ஹீரோ இந்த வில்லன் தண்டபாணியை அடித்து முடித்த கையோடு வேலைக்காக கேரளா சென்றுவிடுகிறார் . அங்கு தான் ஸ்கூல் டேஸில் இருந்து லவ்விய ஆர்த்தியை (தருஷி) எதேச்சையாக சந்திக்க, காதல் மீண்டும் பத்திக்க்கொள்கிறது. ஆனால் நாயகனை ஏனோ வெறுக்கும் ஆர்த்தியை துரத்தி துரத்தி காதலிக்க, ஒருகட்டத்தில் ஆர்த்தியும் கார்த்தி மீது காதல் கொள்கிறார். அதே சமயம், வில்லன் தண்டபாணி கார்த்திக்கை சென்னை வரவழைப்பதற்காக அடுத்தடுத்து பல அஸ்திரங்களை ஏவுகிறார். ஆக கார்த்திக் மீண்டும் சென்னை வந்தாரா, தாண்டபாணி அவரை அடித்து மார்கெட்டை கைப்பற்றினாரா? இல்லை கார்த்திக்கிடம் அடி வாங்கினாரா என்பது மிச்சக் கதை
ஷாஜகான் படத்தின் மூலன் விஜயை இயக்கிய ரவி அப்புலு தான் இந்த படத்தின் இயக்குனர். இவ்வளவு வருடங்கள் கழித்து ஒரு படம் தருகிறார். ஆனால் ஏமாற்றி விட்டார் . ஒரு சின்ன பையன் ஒரு ரவுடியை வெளுத்து வாங்குவது என்பதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக இரும்புத்திரை விஷால் ரேஞ்சுக்கு சண்டை போட்டு சேல்ஞ்ச் பண்ணுவதெல்லாம ரொம்ப ஓவர். அதிலும் வில்லனை படு சீரியசான கேரட்டராக காட்டிவிட்டு, அடுத்தடுத்த காட்சிகளில் அவரை காமெடியனாகவே மாற்றி கிளைமாக்சில் மறுபடியும் கொடூர வில்லனாக அதிலும் சொந்த மகனை பணய கைதியாய் வைத்து ஹீரோவை வரவழைத்து தாக்க வைக்கிறார் இயக்குனர். அதிலும் கார்த்திக்கை மீண்டும் மார்கெட் வரவழைப்பதற்காக வில்லன் செய்யும் காரியங்கள் சிரிப்பை வர வைத்தாலும் அதையே அடுத்தடுத்து செய்யும் போது, ‘அப்பா கார்த்திக்கு நீ வருவியா மாட்டியா, நாங்க வீட்டுக்கு போகனும்’ என ஆடியன்சை வாய் விட்டு கூவ வைத்திருக்கிறார்கள்.
அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர் முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவாக முயன்றிருக்கிறார். அதற்க்காக நடிப்பு பயிற்சி, சண்டை கிளாஸூக்கெல்லாம் போய் வந்தவர் என்பதை நிரூபித்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழகு தேவதை இறக்குமதியாகி இருக்கிறார். கதாநாயகி தருஷிக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. கார்த்திக்கை திட்டுவது, சண்டை போடுவது, பின்னர் காதலிப்பது, டூயட் பாடுவது இவ்வளவு தான் அவருக்கான வேலை. ஆனால் அவர் திரையில் வரும் பொதெல்லாம் ரிலீஃபாக இருக்கிறது.. தருஷி-க்கு நல்ல ஸ்கோப் இருக்கிறது. குப்பத்து அம்மா கேரக்டரில் ரேணுகா. என்ன வேண்டுமோ அதை செய்திருக்கிறார். டிவி காம்பியரான தீனா நண்பனாக வந்து கடுப்பேற்றுகிறார். ‘
என்ஜினியரிங் முடிச்ச ஒரு புதுமுக நடிகரான ராஜன் தேஜெஸ்வருக்கு சினிமா ஆசையையும் தாண்டி வெறி இருக்கிறது, அது இனியும் இருக்கும் என்றவர் தனக்கான கதை களத்தை இன்னும் இன்னும் சுவைபட யோசிக்க தெரிந்தவர்களிடம் தேடினால் மட்டுமே ஜெயிக்க முடியும்..