சர்தார் (கார்த்தி) உளவு வேலை பார்த்ததற்காக வெளிநாட்டு சிறையில் தனி அறையில் அடை பட்டுகிடக்கிறார். உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீரை ஒன் இந்தியா ஒன் பைப் லைன் என்ற திட்டத்தின் கீழ் விலைக்கு விற்பதுடன் இந்தியாவின் தண்ணீர் மேலாண்மையை தன் கட்டுப் பாட்டுக்குள்கொண்டு வர சீனா ரகசிய திட்டம் செயல்படுத்து கிறது. அதை முறியடிக்கும் முயற்சியில்தான் சர்தார் சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டாலும் சீனாவின் சதியை கண்டறிகிறார் இன்ஸ் பெக்டர் விஜய் பிரகாஷ் (கார்த்தி) பின்னர்தான் சர்தார் தனது தந்தை என்பது விஜய் பிரகாஷுக்கு தெரியவருகிறது. தந்தை மீது தேச துரோகி பட்டம் சூட்டப்பட்ட நிலையில் அவரை நிரபராதி என நிரூபிக்க போராடுவதுடன் சீனாவின் தண்ணீர் கட்டுப்பாடு சதியையும் அம்பலப்படுத்தி நிரூபிக்க போராடுகிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா? சர்தார் கதி என்ன ஆனது என்ப தற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக் கிறது.இந்த “சர்தார்” திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்இந்திய அரசின் உளவுத் துறையான ரா-வின் உளவாளி “சர்தார்” கதாபாத்திரத்திலும் காவல்துறை ஆய்வாளர் விஜய் பிரகாஷ் கதாபாத்திரத்திலும் என இரண்டு கதாபாத்திரங்களும் கலக்கி இருக்கிறார் கதாநாயகன் கார்த்தி.கதாநாயகன் கார்த்தி இரண்டு கதாபாத்திரங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.ஒரு உளவாளி, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், மெக்கானிக் ஷெட் வைத்திருக்கும் யூகிசேது அல்லது சிங்கிள் மதராக சமூகத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் லைலா போன்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால், மிகவும் ஆச்சிரியமாக எந்தவிதமான நெருக்கடியான சூழலிலும் அவர்கள் தேசத்திற்கு ஆற்றும் பங்கு அலாதியானது. அது சாமான் ய மக்களுக்கு கற்பனையிலும் எட்டாதது.அவர்கள் சிறப்பாக வேலைசெய்தாலும் கவனிக்கப்படுவதில்லை, அனாதையாக செத்துப்போனாலும் அழுவதற்கு யாரும் இருக்கப்போவதில்லை. இந்த விஷயத்தை சர்தார் கார்த்தி விஷயத்திலும் , சிங்கிள் மதர் லைலா விஷயத்திலுமாக வைத்து உளவாளிகள் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் பி எஸ் மித்ரன்.குடிநீரை பெரு நிறுவனங்கள் எப்படி வியாபாரமாக்குகிறது. பாட்டில் நீரால் வரும் கேடுபற்றி வெட்ட வெளிச்சமாக இயக் குனர் பி.எஸ்.மித்ரன் துணிச்சலாக பேசியிருக் கிறார்
SARDAR
0
283