26.5 C
New York
Thursday, May 9, 2024

Buy now

PrithviPandiyarajan & Chandini in #KadhalMunnetrKazhagam

                     


 பிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும்  “காதல் முன்னேற்றக் கழகம்”                                       மாணிக் சத்யா இயக்குகிறார்

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு –  ஹாரிஸ் கிருஷ்ணன்

இசை   –  பி.சி.சிவன்

பாடல்கள் –   யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா

எடிட்டிங்  –    சுரேஷ் அர்ஸ்

நடனம்   –    அசோக்ராஜா

சண்டை பயிற்சி   –    அம்ரீன் பக்கர்

கலை  –    பிரகதீஸ்வரன்

தயாரிப்பு நிர்வாகம்   –    முத்தையா,விஜயகுமார்.

தயாரிப்பு –   மலர்க்கொடி முருகன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  மாணிக் சத்யா.

படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது,  “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை.  கதா நாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்..

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது… அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.. படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 

15 மிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.

சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார்.

நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம்.

படப்பிடிப்பு  சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். இயக்குனர் மாணிக் சத்யா.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE