20.5 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

“Prabhu Deva sir was like a God father to the entire team of Lakshmi” – Vijay

“Prabhu Deva sir was like a God father to the entire team of Lakshmi” - Vijay 
 
There was something more special about the entire team of Lakshmi.Everyone looked so much invigorating and high spirited. Moreover, one could feel the emotional connect that everyone have with this film. 
 
Prabhu Deva rendered a short and crisp speech that had childlike heart of gesture. He said, “When we decided to make the film, we were sure about one thing that if a dance film is made, it should be on ‘Vera Level’ graph. More than ennobling Vijay as a good filmmaker, I would acclaim him as a good human being. This is the reason why I am working with him with over and again. I am sure, everyone will love this film beyond dance as it owns an emotional premise.”
 
Prabhu Deva also broke the news that he would be teaming up with Vijay for the tied time in Devi 2 and Sam CS will be composing music. 
 
Sharing his words of appreciations for his co-stars, he added, “Ditya will just eclipse us easily on the screens effortlessly. She is a genius and audience will accept it.”
 
Director Vijay had his emotional phrases uttered as he said, “Prabhu Deva sir is more like an elder brother to me. As he said, when we decided to make the film, the main motto was to come up with a substantial one. It was a baggage of huge responsibility on me, but with Prabhu sir on my side, things looked complete positive. I owe a lot to Aishwarya Rajesh for accepting this role and she has done s beautiful job. The little girl Ditya will the steal the show hands down. I am thankful to Ravindran sir as many would buy the film only after watching the final output, but he made it happen immediately after hearing the script.”
 
Aishwarya Rajesh on her part said, “Initially, I was quite determined about playing peppy girl roles after Kaaka Muttai. While working in Parandhu Sella Vaa in Singapore, I got this opportunity and was quite reluctant. But soon after hearing the script by Vijay sir, I couldn’t say No. I am sure Lakshmi will be more than a film and dance. It will definitely have an emotional connection with audiences.”
 
Music Director Sam CS said, “I grew up watching amazed with Prabhu Deva sir movies. It was a huge responsibility on me to compose music for this film. There is a special reason why people love this film. While working on the BGM, I would pause it for a while and people around me will ask me to play it immediately. So I discovered there is a lot of emotions than dance in this movie.”
 
Ravindran of Trident Arts said, “We have already seen the film and it has come out very well. I am sure it will be received very well by everyone.”
 
ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் 'லக்‌ஷ்மி'. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய அனுபவங்களை பகிந்து கொண்டனர். 
 
அப்போது பேசும்போது, "லக்‌ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்த  திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யா தான் என்னை அழைத்து நீ இந்த படம் பண்ணனும் என்று சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குனர் விஜய் சாருக்கு நன்றி. இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்" என்றார் நடிகை ஷோஃபியா. 
 
வனமகன் படத்தை தொடர்ந்து எனக்கு இரண்டாவது முறையாக நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றி. பிரபுதேவா சார் உடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம். குழந்தைகளோடு நடித்தது மிகவும் சவாலாக இருந்தது என்றார் நடிகர் சாம் பால்.
 
இதுவரை நிறைய ஹாரர், திரில்லர் மாஸ் திரைப்படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறேன். முதன் முறையாக ஒரு டான்ஸ் படத்துக்கு இசையமைத்தது, அதுவும் நடனப்புயல் பிரபுதேவா அவர்கள் நடிக்கும், நடனமாடும் படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சியான விஷயம். சின்ன வயதில் பிரபுதேவா சார் படங்களை ரசித்து பார்த்து விட்டு, அவர் படத்துக்கு இசையமைப்பது ஒரு சிறந்த உணர்வு. கரு படம் முடிந்தவுடன், மீண்டும் இந்த படத்துக்கு என்னை இசையமைக்க சொன்னார். இந்த படத்துக்குள் நடனம் தாண்டி பலவிதமான எமோஷன் இருக்கிறது. எமோஷனல் மியூசிக்கல் டான்ஸ் படமாக வந்திருக்கிறது. இந்த குழந்தைகள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் படம் இருக்கும் என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். 
 
நாசர் சார் மகன் பாஷா என்னிடம் விஜய் சார் ஒரு படம் பண்ண போறார், ஒரு 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க் வேண்டும், நடிக்கிறாயா என்று கேட்டார். விஜய் சார் கதை சொன்னபோது உடனடியாக ஓகே சொல்லி விட்டேன். திருமணத்திற்கு முன்பே காக்கா முட்டை, ஆறாது சினம், லக்ஷ்மி படங்களில் குழந்தைகளுக்கு  அம்மாவாக நடித்து விட்டேன். அவர்கள் ரொம்பவே ஸ்பெஷல். ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் இருந்து நான் வந்திருந்தாலும், இந்த படத்தில் எனக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபுதேவா சாருடன் இந்த படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் என்றார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
 
படத்தை பார்த்த ரவீந்திரன் சார் வாங்கி விட்டார், அதுவே படம் நல்லா இருக்கு என்பதை சொல்கிறது. இந்திய அளவில் இருக்கும் நல்ல திறமையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் விஜய். தேவி, லக்‌ஷ்மி படங்களில் விஜய் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து தேவி 2 படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். ஆர்ட் அசிஸ்டண்ட் மாதிரி ஓடி ஓடி உழைத்திருக்கிறார் கலை இயக்குனர் ராஜேஷ். ஐஸ்வர்யா டான்ஸராக இருந்தாலும் இதில் அவருக்கு டான்ஸ் இல்லை, நடிக்க மட்டும் வைத்திருக்கிறோம். குழந்தைகள் மக்ச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்து தான் நிறுத்துவார். சலங்கை ஒலி என்ற டான்ஸ் படம் இதற்கு முன்பு வெளிவந்திருக்கிறது. அது வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம் என்றார் பிரபுதேவா.
 
தேவி படம் இயக்கிக் கொண்டிருந்த போது, ப்ரதீக் மற்றும் ஸ்ருதியை சந்தித்தேன். இந்த கதையின் ஐடியாவை சொன்னேன். உடனடியாக இந்த படத்தை தயாரிக்க முன்வந்தனர். என்ன தான் கஷ்டப்பட்டு படத்தை எடுத்தாலும் அதை கொண்டு சேர்ப்பது முக்கியம். அந்த நேரத்தில் தான் ரவீந்திரன் சார் படத்தை பார்த்து இந்த படத்துக்குள் வந்தார். பிரபுதேவாவை வைத்து டான்ஸ் படம் பண்ணா எப்படி இருக்கும் என்ற ஐடியாவை எனக்கு கொடுத்தது நிரவ்ஷா தான். பிரபுதேவா சார் டான்ஸ் படம் பண்ணா வேற லெவல்ல இருக்கணும் என்றார். இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் அதிக அக்கறை  எடுத்து உழைத்து கொடுத்தார். அவர் எங்கள் டீமுக்கு மிகப்பெரிய பில்லர். படத்துக்கு எது தேவை என்றாலும் பிரபுதேவா சாரிடம் தான் போய் நிற்பேன். ஐஸ்வர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷோஃபியை ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு பரிந்துரைத்ததே ஐஸ்வர்யா தான். ஆண்டனி தான் என் சினிமாவின் முதல் ஆடியன்ஸ். இந்திய முழுக்க நிறைய பேரை ஆடிஷன் செய்து இந்த படத்தில் நடிக்க நடிக்க வைத்திருக்கிறோம். பேபி தித்யா இந்த படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடிப்பார். சாம் சிஎஸ் படத்தின் மிகப்பெரிய பில்லர். அவர் இசை படத்துக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்திருக்கிறது. ஒரு நல்ல, தரமான படத்தை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் இயக்குனர் விஜய். 
 
இந்த சந்திப்பில் கலை இயக்குனர் ராஜேஷ், படத்தொகுப்பாளர் ஆண்டனி, பேபி தித்யா, தயாரிப்பாளர் பிரதீக் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE