பூ சாண்டி வரான் விமர்சனம்
மலேசியாவில் வாழும் இந்தியர்கள் ஆன தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகநாதன், கணேசன் மனோகரன் ஆகிய மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களிடம் பழங்கால நாணயம் ஒன்று உள்ளது. அந்த நாணயத்தை வைத்து ஒரு எழுத்து விளையாட்டை விளையாடுகின்றனர். அதில் வரும் வார்த்தைகளை ஒன்றாக சேர்த்து படிக்கும் பொழுது தங்களுக்கு வேண்டியது கிடைக்கும் என அந்த அமானுஷ்ய சக்தி செல்கிறது. அந்த விளையாட்டு விபரீதமாக மாரி மூவரில் ஒருவர் உயிரிழக்கிறார். இதனால் பயந்த மற்ற இருவர் இது பற்றி ஆராய்ச்சி செய்யும் பத்திரிக்கை நிருபரான மிர்ச்சி ரமணா உதவியை நாடுகின்றனர். அவருடன் சேர்ந்து இது பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். அந்த காசுக்கு சொந்தக்காரரான ஹம்சினியை தேடி செல்கின்றனர். அவரை சந்தித்தபோது அவர் சொல்லும் விஷயங்கள் என்ன? எதனால் தனது நண்பர் உயிரிழந்தார் ?என்பதே படத்தின் மீதிக்கதை,
முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் மிகவும் குறைந்த அளவில் நடிகர்கள் நடித்துள்ளனர். அதிலும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகநாதன், கணேசன் மனோகரன் இந்த மூவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். அதேபோல் பத்திரிக்கையாளராக நடித்துள்ள மிர்ச்சி ரமணா தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இவரை தவிர மற்ற அனைவருமே சினிமாவிற்கு புதியவர்கள். கதாநாயகியாக நடித்துள்ள ஹம்ஷினி மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். ஒரு ஹாரர் கதையை இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதை முதல் படத்திலேயே ஜேகே விக்கி நிரூபித்துள்ளார். மலேசியா ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்திருந்தால் போதும் என்ற எண்ணத்தில் படத்தை எடுத்திருந்தாலும் அங்கு படம் வெளியாகி நல்ல வசூலை குவித்துள்ளது. மேலும் எல்லா ரசிகர்களுக்கும் இந்த படம் போய் சேர வேண்டும் என்பதால் தமிழ் நாட்டிலும் படத்தை வெளியிட முயற்சி எடுத்துள்ளார். குறைந்த அளவில் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, அழகான திரில்லர் கதையை கொஞ்சமும் போரடிக்காமல் கொடுத்துள்ள, இயக்குனர் விக்கியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். எடிட்டிங் பொறுப்பையும் அவரே ஏற்று உள்ளதால் படத்திற்கு கூடுதல் பலம். அசலிஸம் ஒளிப்பதிவில் மலேசியா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் அழகாகத் தெரிகிறது. டஸ்டின் இசையில் பின்னணி இசை மிரட்டியுள்ளது.