14.8 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Kaithi will be a Big Break for me -Naren

அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் கைதி  படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவருடன் ஒரு சிறு நேர் காணல்...

தமிழில் சில காலமாக நீங்கள் படம் செய்யவில்லையே ஏன் இந்த இடைவெளி ?

தெரியவில்லை திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் யூ டர்ன். அதற்குப்பிறகு அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை படத்துல ஒரு கேரக்டர் நடிச்சுருக்கேன். ஃபிளாஷ்பேக்ல ஹீரோ மாதிரி ரத்தினம்னு ஒரு கேரக்டர். சுசீந்தரன் சாரோட சாம்பியன் படத்தில நடிச்சுருக்கேன் இரண்டும் ரெடியாகிட்டு இருக்கு. இது போன வருஷத்துல பண்ணினது. எனக்கே ஆச்சர்யம்  கைதி தான் பெரிய படம். எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ்ஸா இந்தப்படம் இருக்கும்னு தோணுது.

கார்த்தி இந்தப்படத்தில கைதி நீங்க யாரு ?

போலீஸ். ஸ்பெஷல் ஸ்டாஸ்க் ஃபோர்ஸ். முதல்ல கார்த்தி தான் எனக்கு போன் பண்ணினார். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். பர்ஸனலா எல்லாமே பேசிப்போம். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே கார்த்தி நான் போன் பண்றேன்ன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார். அஞ்சாதே படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படினு கேட்டேன். நல்ல கேரக்டர்னு சொன்னார். நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமானு சொன்னார். உடனே நான் ஒத்துக்கிட்டேன். கார்த்தி ஒரு படத்த அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டார் அவர் இருக்கார். அப்புறம் டைரக்டர் லோகேஷோட மாநாகரம் நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சது இப்படி ஒரு டீம்ல வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் பண்ணக்கூடாது. ஆனா லோகேஷ் கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு கண்டிப்பா சூப்பாரா இருக்கப்போகுதுனு. படம் நல்லா வந்திருக்கு.

அஞ்சாதே மாதிரி போலீஸ்  இன்னும் தமிழ்ல வரல. இந்தப்படத்தில அது மாதிரி மேனரிசம் எதும் இருக்கா ?

மேனரிசம் பண்றதுக்கு படத்தில நேரமே இல்ல. படமே ஒரு ஆபரேஷன்ல தான் ஆரம்பிக்கும். பரபரனு ஓடிட்டே இருக்கும். ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிக்கிற நல்ல போலிஸ் எப்படி இருப்பான் அவ்வளவுதான். ரெண்டாவது அவனுக்கு அடி பட்டிருக்கும் நீங்க டிரெய்லர்ல பாத்திருப்பீங்க. அந்தக்கையோட அவன் என்ன பண்றான் அது தான். படம் பாருங்க .

காட்டுக்குள்ல நிறைய ஷீட் பண்ணிருக்கீங்க எப்படி இருந்தது ?

முழுக்க நைட் ஷீட் தான்.  சென்னை தாண்டி செஙகல்பட்டு பக்கத்தில, அப்புறம் கேரளா பார்டர் வரைக்கும் ஷீட் பண்ணினோம். குளிர் தான் ரொம்ப புதுசா இருந்தது அதுவும் தமிழ்நாட்ல. 12 மணி வரைக்கும் ஓகே ஆனா அதுக்கப்புறம் 2,3 மணிக்கு குளிர் பின்னும் நாங்க கூட பரவாயில்லை ஏன்னா எங்களுக்கு 1மணி நேரம், 2மணி நேரம் ரெஸ்ட் கிடைக்கும் ஆனா டெக்னிக்கல் டீமுக்கு அது எதுவும் இல்ல அவங்க தான் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்காங்க. எல்லாப் படத்திலயும் ஒரு கேப் இருக்கும் நாம எஞ்சாய் பண்ணலாம் ஷுட்டே கலகலப்பா இருக்கும். இதுல அப்படி கிடையாது. படமே ராவா இருக்கும். பரபரனு இருப்பாங்க ஆனா சினிமாவ  காதலிக்கிற ஒரு டீம். அவ்வளவு காதலோட எல்லோரும் வேலை பார்த்திருக்காங்க. நாங்களும் சந்தோஷமா வேலை பார்த்தோம் படம் எடுக்கும்போதே படம் சூப்பரா இருக்கும்னு நம்பிக்கை இருந்தது. அது சில படங்கள்ல மட்டும்தான் இருக்கும்

ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்கு ஹீரோயின் இல்லாம நடிக்கறீங்க ?

கார்த்திக்கே கிடையாது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில ஹிரோயினே இல்லாத படம் இது தான். கார்த்திக்கு நிறைய தைரியம் வேணும் இப்படி படம் பண்ண.

கார்த்தியோட பயணம் எப்படி இருந்தது ?

கார்த்திகூட நிறைய பேசினேன் ஒன்னா இவ்வளவு நாள்  கூட இருந்தது இந்தபடத்தால தான் நடந்தது. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு தெரிஞ்சுருக்கு. அவரோட படங்கள பார்த்தாலே தெரியும். இந்தப்படத்தில அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கு. அவருக்கு எனக்கும் நெருக்கமான நட்பு இருக்கறதால பண்ணும்போது ரொம்ப ஈஸியா இருந்தது. அதே மாதிரி அவருக்கு  ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும் அதில சூப்பரா ஃபெர்ஃபார்ம் பண்ணிருக்காரு. ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

முதல் படத்தில் மெகா ஹிட் ஹீரோ, அப்புறம் வில்லன் திடீர்னு காணாம போயிட்ட மாதிரி இருந்ததே ஏன் ?

ஏன்னு எனக்கே தெரியல, அஞ்சாதேக்கு அப்புறமா பூக்கடை ரவினு ஒரு படம் பண்ணேன் அது இன்னும் ரிலீஸாகல சன் டீவியோட ஃபர்ஸ்ட் படம் பாதி ஷீட்டோட நின்னுடிச்சு. தம்பிக்கோட்டைனு ஒரு படம் பண்ணேன் அதுவும் ஒர்க் அவுட் ஆகல. மிஷ்கின் கூப்பிடதால முகமூடில வில்லன் பண்ணினேன் மிஷ்கின்க்காக ஒரு படம் மட்டும்தான்னு முடிவு பண்ணித்தான் பண்ணினேன். ஆனா அதுக்கப்புறம் நிறைய வில்லன் ரோல் வந்தது எனக்கு விருப்பம் இல்ல. நல்ல கேரக்டர் வரட்டும் பண்ணலாம்னு வெயிட் பண்ணேன் நிறைய மலையாள படங்கள் பண்ணினேன். கத்துக்குட்டி வந்தது ஆனா தயாரிப்பு தரப்புல சில பிரச்சனைகள் படம்  சரியா வரல. இப்ப கைதி எனக்கு பெரிய பிரேக் கொடுக்கும்னு நம்புறேன்.

லோகேஷ் எப்படி ?

சினிமா மட்டுமே வாழ்க்கையா நேசிக்கிற ஒரு ஆள் அதத் தவிர எதுவும் பேச மாட்டார். எப்பவும் வேலைதான். நான் ஒரு கமல் ஃபேன் அவர் என்னவிட பெரிய ஃபேன். நிறைய ஹாலிவுட் படம் பார்ப்பார் அதப்பத்தி பேசுவோம். என்ன புதுசுன்னா எல்லாரும் ஹாலிவுட் படம் பார்ப்பாங்க. இங்க அது மாதிரி பண்ண ஆசைப்பட்டு வித்தியாசமா பண்ணுவாங்க. படம் நல்லாருக்கும். ஆனா படம் பெரிசா போகாது. டீவியில பார்த்த நல்லாருக்கேனு சொல்லுவோம். இங்க படம் ஓட  இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு அதில இன்னும் சில விஷயங்கள் சேர்க்கனும் அதில் கில்லாடி லோகேஷ். அவர் வித்தியாசமா பண்ற அதே நேரத்தில இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு என்ன பண்ணனும்னு தெளிவு இருக்கார். அவர் பெரிய இடத்துக்கு போவாரு.

ஷீட்டிங்கல நடந்த சுவாரஸ்யங்கள்  ?

ஷீட்டிங்கே ரொம்ப கஷ்டம் முழுக்க நைட்தான் ஒரு நாள் தூங்கலைனாலும் நமக்கு சோர்வா இருக்கும் தொடர்ந்து 40, 50 நாள்னா பார்த்துகங்க. ஆனா படத்திலேயும் அந்த கேரக்டர் சோர்வா இருக்கும் அதனால அத மெயிண்டைன் பண்ணிட்டேன். கார்த்தி கூட இருந்ததால ரொம்ப ஈஸியா இருந்துச்சு.

படம் பார்த்திட்டீங்களா எப்படி வந்திருக்கு ?

படம் எடுக்கும் போதே தெரியும் சூப்பரா வந்திருக்கு. முக்கியமான காரணம் கேமராமேன் சத்யன். முகமூடில அவர் கூட வேலை பார்த்திருக்க்கேன். இந்தப்படத்தில விஷிவலா மிரட்டிருக்கார். லோகேஷ் கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிபட்ட டீம்ல இருந்ததே சந்தோஷம்தான்.

அஞ்சாதே இப்பவும் பேசப்படும் படம் மிஷ்கின் கூட திரும்ப எப்ப படம் பண்ணுவீங்க ?

தெரியல. எனக்கு அஞ்சாதே 2 பண்ண ஆசை. மிஷ்கின் சார் கூட பேசிருக்கேன் அவரும் பண்ணலாம்னு சொல்லிருக்கார். அது அஞ்சாதே 2 வா இருக்கலாம் இல்ல புதுபடமா இருக்கலாம் பார்ப்போம்.

நீங்க ரொம்ப அழுத்தமான பாத்திரங்கள்லேயே நடிக்கறீங்க ஏன் ?

எனக்கு காமெடி ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு அந்த மாதிரி ரோல் வர்றதே இல்ல. அஞ்சாதேக்கப்புறம் எல்லோரும் அதே மாதிரி ரோலோட தான் வர்றாங்க. மலையாளத்துல அத உடச்சி ரெண்டாவது படமே ஹியூமரா பண்ணிட்டேன். தமிழ்ல பத்து வருஷம் ஆகியும் அத உடைக்க முடியல. டைரகடர்ஸ் கொடுத்தா எந்த மாதிரி ரோலும் ஓகே பண்ணலாம்.

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க ?

தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். கைதி கமர்ஷியல் படம்  தான் ஆனா வித்தியாசமா இருக்கும் புதுசா இருக்கும். பிகில், கைதி ரெண்டும் பாருங்க பிடிக்கும். நன்றி .

கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு,  SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து  தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். N சதீஷ்குமார் கலைஇயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இணைந்து வசனம்  எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE