27.4 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

Ilaya Thalapathy RASIGAN DAA – Guru Kalyan’s Music Single – News

நடிகர் விஜயின் பெருமைகளை பேசும் "இளையதளபதி ரசிகன் டா"

மாத்தியோசி, குகன் போன்ற படங்களுக்கு இசை அமைத்த குரு கல்யாண், அண்மையில் குழந்தைகள் தின பாடல், ஜல்லிக்கட்டு உட்பட பல தனிப்பாடல்களுக்கு இசையமைத்து தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். கவிஞர் பழநிபாரதி வரிகளில் இவர் இசையமைத்த பாடலான "வதுவை நன்மனம்" ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இளைய தளபதி விஜயிடம் அவரது ரசிகர்கள் கொண்ட மதிப்பிடமுடியாத அன்பை கண்டு வியந்து அவர்களுக்காக ஒரு பாடலை உருவாக்க வேண்டுமென என்னிய இசையமைப்பாளர் குரு கல்யாண், "இளையதளபதி ரசிகன் டா" எனும் பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இளையதளபதி விஜய் அவர்களுக்காக பல பாடல்களை எழுதிய கவிஞர் பழநிபாரதி இப்பாடலை எழுதியுள்ளார்.

"கில்லி நாங்கடா சொல்லி அடிப்போம்..." என்று துவங்கும் இப்பாடலை விஜய் ரசிகரான நடன இயக்குனர் செந்தில் குமாரின் 'ஸ்டேப் அப் தமிழ் பசங்க' நடனம் அமைத்துள்ளனர்.

இளையதளபதி விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இடையே இருக்கும் தனிச்சிறப்பின் தொகுப்பாக இப்பாடல் அமையும் என்று கூறும் குரு கல்யாண் விரைவில் இப்பாடலை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Music: Guru Kalyan
Lyrics: Palani Bharathi
Dancers: StepUp Thamizh Pasanga
Dance Director: Senthil Kumar

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE